|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 August, 2011

மதிப்பை உயர்த்தும் புடவை!

பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரீகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்றபொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாகத் தென்இந்தியாவில் சேலைகளின் பயன்பாடு மிக அதிகம். பெரும்பாலும் திருமணமான பெண்களே சேலைகளை விரும்பி அணிகின்றனர். கைக்குழந்தை உள்ள பெண்களுக்கு சேலை மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும்.

புடவையில் தெரியும் அழகு: நாகரீக உடையை அணிவது போல புடவை கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஐந்தரை மீட்டர் நீளமுள்ள புடவையை கட்டும் போது சற்றே கவனம் பிசகினாலும் அவிழ்ந்து விழுந்து மானத்தை வாங்கிவிடும். எனவே புடவை கட்டும் போது சில விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். பெட்டிகோட்டும், ரவிக்கையும் புடவையுடன் இணைந்து அணியக்கூடிய ஆடைகள் ஆகும். அவை மேட்சாக இல்லாவிட்டால் என்னதான் விலை உயர்ந்த புடவை அணிந்தாலும் பாந்தமாக இருக்காது. எனவே அவற்றிலும் கவனம் தேவை.

பெண்ணுக்கு தனி வாசம்: வட இந்தியாவில் குறிப்பாக குஜராத்தில் புடவையின் முந்தானை முன்பக்கமாக வருமாறு அணிவார்கள். ஆனால் தென்னிந்தியாவில் புடவை முந்தானை பின்பக்கம் வருமாறு பார்த்து அணிகின்றனர்.

புடவை கட்டுவதில் முக்கியமானது மடிப்பு எடுத்து கொசுவம் சொருகுவதுதான். முன்பெல்லாம் கிராமத்தில் உள்ளவர்கள் கெண்டைக்கால் தெரிய புடவையை உயர்த்தி கட்டி பின் கொசுவம் வைத்து கட்டியிருப்பார்கள். இப்போது கால மாற்றத்திற்கு ஏற்ப அனைவருமே முன்கொசுவம் வைத்து தளர கட்டத் தொடங்கிவிட்டனர். புடவையின் நீளத்திற்கு ஏற்பவே கொசுவ மடிப்பு எடுத்து இடுப்பில் சொருகவேண்டும். சேப்டி பின் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. மீதமுள்ள புடவையை அழகாக மடிப்பு எடுத்தோ அல்லது ஒற்றைத் தலைப்பிலோ இடது தோல் மேல் போட்டு பின் குத்தி விட வேண்டும். முதன் முதலாக புடவை கட்டும் போது அரைமணி நேரமாவது ஆகும். பின்னர் பழகப் பழக ஐந்து நிமிடத்தில் புடவை கட்டிவிடலாம்.

ஊர் பெருமையை கூறும் புடவைகள்: பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பட்டுசேலைகள் முதல் சிலநூறு ரூபாய் உள்ள காட்டன் சேலைகள் வரை இந்தியாவில் தயாராகின்றன. பட்டு என்றாலே சட்டென்று அனைவருக்கும் நினைவில் வருவது வாரணாசியும், காஞ்சிபுரமும்தான். பனாரஸ் சில்க் என்று அழைக்கப்படும் வாரணாசி பட்டு உயர்தரமான பட்டு நூலால் தயாரிக்கப்படுகிறது. இவைகளை திருமணம், விழாக்கள் போன்றவற்றிற்கு அணிந்து சென்றால் சிறப்பான தோற்றத்தைத் தரும். காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் முந்தானை டிசைன் உலக அளவில் புகழ் பெற்றது. தமிழகத்தில் பழங்காலத்தில் இருந்தே தயாரிக்கப்பட்டு வரும் இந்த புடவைகள் கையால் நெய்யப்படுவதால் நல்ல தரமாக இருக்கும்.

ஒரிசாவின் `இக்கத்’ சேலைகளில் அதிக கைவேலைபாடுகள் காணப்படுகின்றன. எம்ராய்டரி செய்யப்பட்ட இத்தகைய சேலைகள் பிரபலமானவை. இதில் ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்கள் அதிகமாக பயன்படுத்தபட்டிருக்கும். காஷ்மீரின் மொஷிதாபாத் சேலைகள், சைனா சில்க்கை போன்று இருக்கும். இதை `பெங்காலி சில்க்` என்றும் கூறுவர். காஷ்மீரின் பாரம்பரிய உடையான இதில் காஷ்மீர் டிசைன்கள் நிறைந்திருக்கும்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் `பந்த்னி’ சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் வெள்ளை நிற சேலைகளே அதிகமாக இருக்கும். அதில் நூல் வேலைபாடு செய்யபட்டிருக்கும். பாத்திக் வகை சேலைகளில் மெழுகு பயன்படுத்தபட்டிருக்கும். இந்த சேலைகளை அணிந்தால் வடஇந்தியத் தோற்றத்தைக் கொடுக்கும். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் புடவைகளுக்கு பெயர்பெற்ற நகரமாகும். இங்கு கிடைக்கும் புடவைகள் சிறப்பு வாய்ந்தவை.

தென்மாநில புடவைகள்:கர்நாடகாவின் பன்கடி சேலைகள் விலை குறைவானவை. தினமும் பயன்படுத்தும் விதத்தில் இவை இருக்கும். ஆந்திராவின் போச்சம்பள்ளி சேலைகள் அதிக எடை கொண்டதாய் இருக்கும். அந்த அளவுக்கு கைவேலைப்பாடுகள் மிகுந்திருக்கும். மங்கல்கிரி சேலைகளும் அங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை சேலைகளில் பார்டர் டிசைனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

தமிழ்நாட்டில் கிடைக்கும் காஞ்சிபுரம் பட்டு போல கோயம்புத்தூர் காட்டன் சேலைகளும் பிரசித்தி பெற்றது. பினிஷிங் நன்றாக இருக்கும் சின்னாளபட்டி சுங்குடி புடவைகள் பெண்களின் தோற்றத்திற்கு தனி மதிப்பினை தரும். ஆயிரம் ஆடைகள் அணிந்தாலும் சேலை கட்டும் பெண்ணுக்கு என்று தனிவாசம் இருப்பதை புடவையை கட்டி பார்த்தால்தான் தெரியும்

கின்னஸ் சாதனை படைக்க 250 விதமான தோசை!

தூத்துக்குடியில் கின்னஸ் சாதனைக்காக பெண்கள் கலந்து கொண்ட 250 வகையான சோதனை சுடும் போட்டி நடந்தது.

தூத்துக்குடியில் அகில இந்திய சுய உதவி குழு ஓருங்கிணைபு சார்பில் மலர் வெளியிட்டு விழா மற்றும் கின்னஸ் சாதனைக்காக 250 வகையான தோசை சுடும் போட்டி நடந்தது.

ஒருங்கிணைப்பு குழு மேலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ராக் குரூப்ஸ் தலைவர் செல்வராணி, நிர்வாகி சாந்தி முன்னிலை வகித்தனர். பெண்கள், சுய உதவி குழுவினர், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் கின்னஸ் சாதனை முயற்சியாக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் கொண்டு 250க்கும் மேற்பட்ட வகையான தோசை சுடும் போட்டி நடந்தது.

இதில் 200 குழுக்களை சேர்ந்த பெண்களும், 20 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளும் கலந்து கொண்டு விதவிதமான பல்வேறு சுவையான தோசைகளை சுட்டனர். வெற்றி பெற்றவர்களுககு டிஎஸ்பி ஜெயக்குமார் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து வண்ணக் கோலபோட்டி நடந்தது.

தமிழகத்தில் 5 தனியார் நிறுவனங்கள் அமைக்கும் புதிய அனல் மின்நிலையம்!

தமிழகத்தில் நிலவும் கடும் மின் தட்டுப்பாட்டை நீக்க 5 புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பெயர்களை தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை. ஆனால், இவற்றுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுவிட்டதாக தமிழக மின்சார உற்பத்தி மற்றும் வினியோகக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீர்காழி, தூத்துக்குடி, விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட 5 இடங்களில் இந்த அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த 5 நிலையங்களும் 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உள்ளன. தமிழகத்தில் இப்போது மின்சாரத் தேவை 10,500 மெகாவாட் முதல் 11,000 மெகாவாட் ஆக உள்ளது.

ஆனால், இப்போது 8,000 மெகாவாட் முதல் 10,237 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் 2,500 முதல் 3,500 மெகாவாட் வரை மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்கும் வகையில் 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 5 தனியார் நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் கூடுதலாக வெறும் 206 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ALL NEW MARUTI - SWIFT


ஒரு கொடூர காட்சி...!


வாழைப்பழத்தின் மகிமை!

வாரம் ஒரு நாள் முழுவதும் வாழைப்பழங்களாகவே உண்டு வேறு எந்த உணவுகளையும் பானங்களும் அருந்தாமல் உபவாசம் போல் இருக்கலாம். நம் உடலில் சேர்ந்துவிடும் அமிலங்களை அழித்து வெளியேற்றுவதில் வாழைப்பழம் ஈடு இணைஇல்லாமல் செயல் புரிகிறது, இதர உணவுகளுடன் உண்ணப்படும் வாழைப்பழம் முழுமையாக செயல்பட இயலுவதில்லை. ஒருநாள் முழுவதும் வாழைப்பழம் மட்டும் உண்டால், மிக விரைவில் ரத்தம் சுத்த மடையும் இதேபோல், சாத்துக்குடி மட்டும் ஒருநாள் முழுவதும், ஆரஞ்சுப் பழம் மட்டுமே உண்டாலும் இதே பலன் கிடைக்கும். பழங்கள் எதுவானாலும் பழங்களுடன் தண்ணீர் அல்லது வேறு உணவுகளை உண்ணுதல் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னாலும், 30 நிமிடங்களுக்குப் பின்னாலும் தண்ணீர் போன்றவை அருந்தலாம். எந்த வகை பழமானாலும் அதனுடன் வேறு பானங்களோ தண்ணீரோ சேர்ப்பதினால் பழங்களின் தன்மை கெட்டு விடுகிறது. அதனால் பழங்களின் பயன்களை நாம் அடைய முடியாது. தனியாக பழங்களை மட்டுமே உண்டால் முழுப்பயனும் கிடைக்கும்.

ANNA HAZARE- other-activists-to-be-released-tonight-from-tihar-jail!

Anna Hazare, and his fellow activists will be released tonight from Tihar Jail. The Delhi Police have sent their release warrants to the jail authorities. Huge crowds have gathered outside the Tihar Jail in West Delhi in support of Anna.
The anti-corruption crusader was lodged in a normal cell in jail no 4. Ironically, among the more well-known residents of jail no. 4 is Suresh Kalmadi, charged with large-scale corruption in Commonwealth Games projects. To add to the irony, Mr Hazare's fellow-activist and Magsaysay award winner Arvind Kejriwal is in a jail that houses DMK leader A Raja, also in jail on charges of corruption in the 2G scam.

The pressure showed when jail authorities sought to make clear that Anna Hazare and Suresh Kalmadi shared only a jail, not a ward. Director General, Prisons, Neeraj Kumar said Mr Hazare's ward was in fact some distance away from that of Mr Kalmadi. He also said that Mr Hazare had been given tight security, had been medically examined and was well.
The 74-year-old Hazare and two key members of his team - Mr Kejriwal and Manish Sisodia - have been sent to seven days in judicial custody because they refused to apply for bail after being arrested in the capital today. All three are fasting. Two more key members of Team Anna - Kiran Bedi and Shanti Bhushan - were charged under Section 65 of the Delhi Police Act, which does not mandate custody. They were  released from detention earlier this evening. In cities, big and small, across the country, angry people have taken to the streets in protest against Anna Hazare's arrest. Thousands have been detained, over 8,400 in Delhi alone, claims India Against Corruption (IAC), a citizen's movement to demand strong anti-corruption laws.



அன்னா ஹசாரே கைது வெடித்தது போராட்டம் !


சுதந்திரம்...

இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடியிருக்கிறோம். யோசித்தால், ஒன்றுமே செய்யாமல் வீட்டில் ‘சிறப்ப்ப்ப்ப்புத் திரைப்படங்களை’ மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சமாய் இருக்கும். நம்மூர் செய்தித் தொலைக்காட்சிகள் வெவ்வேறு ஊர்களில், திரும்பத்திரும்ப கொடி ஏற்றியதையும், முட்டாய் கொடுத்ததையும் சொல்லிக்கொண்டிருந்தன. அதே நேரத்தில் அன்னா ஹசாரே என்ற அந்தத் தனி மனிதன் ராஜ் காட்டில், மழைத்தூறலில் அமர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். பார்த்துக்கொண்டே இருந்தபோது கண்கள் மறைத்து அவர் போட்டிருந்த வெள்ளை உடை மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. அழுதிருக்கிறேன். 

நாளை அவர் உண்ணாவிரதம்  இருப்பதற்குத் அனுமதியும் மறுத்து, அந்தப்பகுதிக்கு 144 தடை உத்தரவையும் விதித்திருக்கிறது திருடர்களைப் பாதுகாப்பதில் முனைப்புடன் இருக்கும் ’மண்’மோகன் அரசு! இதற்கிடையில் அன்னாவின் அறக்கட்டளை பற்றி விமர்சனங்கள் வேறு! அவர் தவறு செய்திருக்கிறார் என்றால் இவ்வளவு ஆண்டுகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? இப்போது நோண்டக்காரணம் அவர் உங்கள் உயிர்நாடியான ஊழலை எதிர்க்கிறார் என்றுதானே? அடிமைப்பட்டிருந்த காலத்தில் பிறந்து , அஹிம்சையால் சுதந்திரமடைந்த ஒரு நாட்டில், ஊழலின் வேர் ஆழமாக ஊன்றியிருக்கும் வேளையில் , அதைக் கொஞ்சமாவது வெட்டவேண்டுமென்று நினைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அஹிம்சை வழியில் போராடும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள்?வெட்கமாக இருக்கிறது!இப்படி யோசித்துப்பார்த்தேன்.

மேடையில் சுதந்திரமடைந்ததற்கு பெருமைப்பட்டு தேசியக்கொடியை ஏற்றிவிட்டு வாய்கிழியப் பேசிவிட்டு, கீழிறங்கியவுடனேயே , ஒரு கூட்டம் நாட்டு நலனுக்காகப் போராட இருப்பதை ஒடுக்க சதித்திட்டம் தீட்டும் பிரதமர் வேலை தேவையா மிஸ்டர். சோனியா? ஒருவேளை சோறின்றி பட்டினியாகக் கிடக்கும் அத்தனை ஏழைகளையும் ஒன்றுதிரட்டினால், இந்தியாவில் தினசரி நடக்கும் சாதாரண நிகழ்வுதான் உண்ணாவிரதம்! அதற்கு என்ன தடை போடுவார்களாம்? அப்படித்தான் போடுங்களேன். பட்டினிச்சாவுகள் நிற்கும்!! 

திருட்டை ஒழிக்கவேண்டுமென்பதற்காக, அதற்கான சட்டத்தை திருடர்களை விட்டே இயற்றச்சொன்னால் இப்படித்தான் நடக்கும்! நாளை அன்னாவை கைது செய்தாலோ, அவர் உண்ணாவிரதத்தை ஒடுக்கினாலோ நாம் மெரினாவில் ஒன்றுகூடுவோமா? – அன்னாவை ஆதரிக்கிறோமோ இல்லையோ இந்த சமுதாயம் ஊழலை ஆதரிக்கவில்லை என்ற ஒற்றை மனநிலையையாவது காட்டலாம்.

நன்றி: சுரேகா.  


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...