தமிழகத்தில் நிலவும் கடும் மின் தட்டுப்பாட்டை நீக்க 5 புதிய அனல் மின்
நிலையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த
நிறுவனங்களின் பெயர்களை தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை. ஆனால்,
இவற்றுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுவிட்டதாக தமிழக மின்சார உற்பத்தி
மற்றும் வினியோகக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீர்காழி, தூத்துக்குடி, விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட 5 இடங்களில் இந்த அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த 5 நிலையங்களும் 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உள்ளன. தமிழகத்தில் இப்போது மின்சாரத் தேவை 10,500 மெகாவாட் முதல் 11,000 மெகாவாட் ஆக உள்ளது.
ஆனால், இப்போது 8,000 மெகாவாட் முதல் 10,237 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் 2,500 முதல் 3,500 மெகாவாட் வரை மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்கும் வகையில் 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய 5 தனியார் நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் கூடுதலாக வெறும் 206 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment