ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
14 May, 2011
இதே நாள்
விமான நிலையத்தில் சூட்கேஸ்களில் புலி குட்டிகளை கடத்திய பயணி
United Arab Emirates Citizen Arrested at Suvarnabhumi Airport For Attempted Animals Smuggling:
Thailand : Different international news reported that a 36-year-old, United Arab Emirates (UAE) citizen, was detained in Suvarnabhumi, Thailand airport on Thursday night, May 12,2011, for trying to smuggle live rare animals out of Thailand.
Steven Galster, director of FREELAND, who was present during the bust, said that there were two leopards, two panthers, an Asiatic black bear and two macaque monkeys, all about the size of puppies. Animals were sedated and placed in a suitcase and others were placed inside canisters with air holes.
The animals were headed to Dubai.
The man, who tried to smuggle the animals, was waiting to check-in in his flight as first class passenger, when anti-trafficking officers, who have been monitoring all his moves since his black market purchase of the rare and endangered animals, apprehended him.
Officials said that the animals were about 2-3 months old and were estimated to have a total worth around 420,000 baht ($14,000).
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல விமானம் தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது முதல் வகுப்பில் செல்ல முன்பதிவு செய்து இருந்த பயணி ஒருவரின் சூட்கேஸ்களை சோதனையிட்டபோது அதில் புலிக்குட்டிகளும், சிறுத்தை குட்டிகளும் இருந்தன.
இதைப்பார்த்து விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பயணி புலிக்குட்டிகளை தாய்லாந்தில் இருந்து துபாய்க்கு கடத்தி செல்ல இருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அந்தப் பயணியை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட புலிக்குட்டிகளை மிருகக்காட்சி சாலைக்கு அனுப்பி வைத்தனர்.
பழைய தலைமை செயலகத்திலேயே புதிய சட்டப்பேரவை!
2011 பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. 3-வது முறையாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்-அமைச்சராக திங்கட்கிழமை பொறுப்பேற்கிறார்.
\
இந்த நிலையில், பழைய தலைமை செயலகத்திலேயே புதிய சட்டப்பேரவை அமைக்கப்படுகிறது. அதற்காக சட்டப்பேரவை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.
மேலும் பழைய தலைமைச்செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த செம்மொழி தமிழாய்வு மையப் பெயர்பலகை மாற்றப்பட்டு தமிழ்நாடு அரசு தலைமைச்செயலக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் நிலநடுக்கம் - 10 பேர் பலி
The magnitude 5.1 earthquake which struck the lovely – and generally sleepy - Murcian city of Lorca this week was undeniably tragic. It was also incredibly bad luck.
Spain experiences an average of over a thousand earthquakes every year. Everyone bar seismologists remain blissfully unaware of the vast majority of the violent shifts going on beneath our feet. A tiny fraction of these shifts cause us to pause for a second and wonder what is making the lights sway. An even tinier fraction cause damage. An even tinier fraction, still, cause injury or death.
Earthquakes of magnitude 5 rarely cause damage or death - Spain has actually had 9 earthquakes in the past year of the same intensity or greater than Lorca. Such earthquakes are 100 times less energetic, for example, than both the 7.3 Huelva quake of 1969 in which 19 people died, and the hugely destructive 7.0 Granada quake of 1954.
Southern and eastern Spain - like Italy, Greece, etc – lies on the boundary between the European and African tectonic plates. This leads to frequent seismic activity (the Pyrenees and Galicia also lie on faults, and also get a high number of seismic events). There have, in fact, been 27 events registered on mainland Spain in the past 10 days alone.

ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் உள்ள லோர்கா நகரில் நேற்றுமுன்தினம் இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டரில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. பூமிக்குள் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டியிருந்தது. நிலநடுக்கத்தில் லோர்கா நகரமே குலுங்கியது. அடுக்குமாடி கட்டிடங்கள் பல இடிந்து நொறுங்கி விழுந்தன. அதில் 10 பேர் சிக்கி பலியாகிவிட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வீடுகள் குறிப்பாக பலமாடி கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளுக்குள்ளே இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு தெருக்களுக்கு ஓடிவந்துவிட்டனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் மீண்டும் நிலநடுக்கம் அதே நகரில் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. ஸ்பெயின் நாட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனையடுத்து தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு நாடு முழுவதும் இருந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - 2011
இந்திய அணிக்கு காம்பிர் கேப்டன்!
தோனி ஓய்வு காரணமாக, இந்திய அணியின் கேப்டனாக காம்பிர் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை, 5-0 என்று கைப்பற்றி அசத்தியுள்ளார். துணைக்கேப்டன் பொறுப்பு ரெய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. "ஆல் ரவுண்டர்' இடத்தை யூசுப் பதான் தட்டிச் சென்றார்.
சச்சின் ஓய்வு தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வரும், இந்திய அணியின் சீனியர் வீரர்கள் சச்சின், ஜாகிர் கான், கேப்டன் தோனி ஆகியோருக்கு "டுவென்டி-20', ஒருநாள் போட்டிகளில் ஓய்வு தரப்பட்டுள்ளது. இவர்கள் டெஸ்ட் அணியில் இடம் பெறுவார்கள். காயம் காரணமாக சேவக், ஆஷிஸ் நெஹ்ரா இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. பத்ரிநாத் அபாரம்"மிடில் ஆர்டருக்கு' பத்ரிநாத், ராயுடுவுக்கு இடையே கடும் போட்டி இருந்தது. ஆனால், அனுபவம் மற்றும் கடந்த ரஞ்சிக் கோப்பை சீசனில் (922 ரன்கள்) அசத்தியதன் காரணமாக, வாய்ப்பு பத்ரிநாத்துக்கு சென்றது. ரோகித் சர்மாவும் மீண்டும் அணிக்கு திரும்பினார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக பார்த்திவ் படேல், சகா ஆகியோர் மறுபடியும் தேர்வு செய்யப்பட்டனர்.ஸ்ரீசாந்த் "அவுட்'வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில், உலக கோப்பை தொடரில் இடம் பெறாத பிரவீண் குமார், மீண்டும் வாய்ப்பு பெற்றார். இவருடன் வினய் குமார், முனாப் படேலும், டெக்கான் அணிக்காக ஐ.பி.எல்., தொடரில் அசத்தி வரும் இஷாந்த் சர்மாவும் அணியில் இடம் பெற்றனர். அதேநேரம், தற்போதைய "டுவென்டி-20' தொடரில் ஏமாற்றி வரும் ஸ்ரீசாந்த், அணியில் இருந்து நீக்கப்பட்டார்.மிஸ்ராவுக்கு வாய்ப்பு:சுழல் பந்து வீச்சில் ஹர்பஜன் சிங், அஷ்வின் ஜோடியுடன் அமித் மிஸ்ரா இணைந்தார். உலக கோப்பை அணியில் இடம் பெற்ற பியுஸ் சாவ்லா, பஞ்சாப் அணியின் ராகுல் சர்மா, இக்பால் அப்துல்லா ஆகியோருக்கு இம்முறை அணியில் இடம் கிடைக்கவில்லை. இதேபோல, அதிரடி வல்தாட்டி, மனோஜ் திவாரிக்கும் ஏமாற்றமே கிடைத்தது.வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி குறித்து தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,"" சீனியர்கள் இல்லாத நிலையில், சமபலத்துடன் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என நினைக்கின்றேன். இவர்கள் சிறப்பாக செயல்பட்டு, வெற்றி நடையை தொடர்வார்கள் என்று நம்பிக்கை உள்ளது,'' என்றார்.
---
16 பேர் கொண்ட இந்திய அணி:
காம்பிர் (கேப்டன்), ரெய்னா (துணைக் கேப்டன்), பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), விராத் கோஹ்லி, யுவராஜ் சிங், பத்ரிநாத், ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங், அஷ்வின், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, முனாப் படேல், வினய் குமார், யூசுப் பதான், அமித் மிஸ்ரா, சகா.

தன்மானத் தமிழன்!
1967-லும், 1977-லும், 1996-லும் காணப்பட்ட எழுச்சியை இந்தத் தேர்தலிலும் காண முடிகிறது. பெருந்திரளாக மக்கள் வாக்குச்சாவடியை நோக்கிப் படையெடுத்ததை, ஆளும் கட்சியினர் தங்களது பணப் பட்டுவாடாவின் விளைவு என்று தப்புக்கணக்குப் போட்டனர் என்றால், பல தேசியத் தொலைக்காட்சி சேனல்களின் கருத்துக் கணிப்புகளும்கூட அல்லவா, எதார்த்த நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்குக் கட்டியம் கூறின? குழப்பம் ஆட்சியாளர்களிடமும், ஊடகங்களிடமும் இருந்ததே தவிர, மக்களிடம் இருக்கவில்லை.
மின் வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்னைகள் திமுக ஆட்சியினர்மீது மக்களுக்குப் பரவலான அதிருப்தி ஏற்படுவதற்குக் காரணிகள் என்றாலும், திமுகவைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியது என்னவோ "குடும்ப ஆட்சி' என்கிற அருவருப்பான விஷயம்தான். ஜெயலலிதா தலைமையில் அமைய இருக்கும் அதிமுக ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாவிட்டாலும் நிச்சயமாகத் தலையீடு தவிர்க்க முடியாதது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அது நன்றாகத் தெரிந்திருந்தும் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சியில், அவரது மனைவி மட்டுமோ அல்லது அவரால் வாரிசு என்று அடையாளம் காட்டப்பட்ட துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் குடும்பம் மட்டுமோ ஆதிக்கம் செலுத்தி இருந்தால்கூட மக்கள் இந்த அளவுக்குக் கோபமும் வெறுப்பும் அடைந்திருக்க மாட்டார்கள். கருணாநிதியின் குடும்பம் என்கிற பெயரில், மனைவி, துணைவி, மக்கள், பேரக் குழந்தைகள் என்று ஒரு டஜன் குடும்பங்களின் ஆதிக்கமல்லவா நடந்தது?
அதைக்கூடப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். மாவட்டத்துக்கு மாவட்டம், தொகுதிக்குத் தொகுதி, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு என்று அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், வட்டச் செயலர்கள் என்று பல நூறு குடும்பங்கள் செலுத்திய ஆதிக்கமும், அரங்கேற்றிய அட்டகாசங்களும் கொஞ்சமா நஞ்சமா? அத்தனை அடாவடிப் பேர்வழிகளுக்கும் வாக்குச் சீட்டின் மூலம் தக்க பாடம் புகட்டி இருக்கிறாôர்கள்.
தமிழனை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. தமிழன் இந்தியாவையும், மக்களாட்சியையும் காப்பாற்றி இருக்கிறான். அதற்காக அவனுக்குத் தலைவணங்க வேண்டும் போலிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில், நாங்கள் முறையாகப் பணம் விநியோகம் செய்திருப்பதால் வெற்றிபெற்று விடுவோம் என்றும், எங்களது இலவசத் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை அதனால் வெற்றி பெற்று விடுவோம் என்றும் எத்தனை திமிராகத் திமுகவினர் பேசினார்கள்.
யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், திருமங்கலம் ஃபார்முலா, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஆளும் கட்சியினராலோ, எதிர்க்கட்சியினராலோ, அரங்கேற்றப்பட்டிருக்காதா? மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால், வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறினால், அதன் தொடர்விளைவு அராஜகத்திலும், தீவிரவாதத்திலும் அல்லவா முடிந்திருக்கும்? இந்தியா தமிழனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதா, இல்லையா?
முன்னாள் அமைச்சர் ஒருவரின் தொகுதியில் ஏறத்தாழ 10,000 வாக்காளர்களுக்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு மாவட்டத் தலைநகரிலுள்ள ஷோரூமிலிருந்து டிவிஎஸ் 50 இலவசமாக எடுத்துச் செல்லும்படி பணித்தார்கள். எட்டே எட்டுபேர் மட்டும்தான், டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். ஏனையோர் அந்த டோக்கனைக் கிழித்துப் போட்டுவிட்டு வாக்களித்திருக்கிறார்கள். பல இடங்களில் நரிக்குறவர்களின் காலனியில் பண விநியோகம் செய்தவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள்.
பட்டணத்தில் படித்தவர்கள் காரில் வந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வெட்கமில்லாமல் கேட்டுச் செல்லும்போது, பல கிராமத்து ஏழைத் தமிழர்கள் தங்களை விலைபேச வந்தவர்களை விரட்டி அடித்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது மேனி சிலிர்க்கிறது. இனிமேல், அரசியல்வாதிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிக்க மாட்டார்கள். பண விநியோகத்தால் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படாது என்பதால், தங்கள் கைப்பணத்தை விரயமாக்கத் தயாராக மாட்டார்கள்.
பணத்துக்கு ஆசைப்பட்டும், இலவசங்களில் மயங்கியும் தனது வாக்குகளை விலைபேசத் தயாராக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டிருக்கிறான் தன்மானத் தமிழன். ஆட்சியாளர்கள் என்னதான் இலவசங்களை அள்ளிக் கொடுத்தாலும், அடிப்படை நிர்வாகம் இல்லாமல் போனால், மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காமல் போனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாவிட்டால், அந்த ஆட்சியைத் தூக்கி எறியத் தயங்க மாட்டோம் என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெளிவாக்கி இருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். என்னவொரு அரசியல் முதிர்ச்சி, பெருமிதமாக இருக்கிறது!
ஈரோட்டில் முத்துசாமி, முதுகுளத்தூரில் சத்தியமூர்த்தி, கிணத்துக் கடவில் மு. கண்ணப்பன், ஆர்.கே. நகரில் சேகர்பாபு என்று கடைசி நேரத்தில் கட்சி மாறிய அத்தனை சந்தர்ப்பவாதிகளும் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். ஜாதிக் கட்சிகளான பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்று சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்தவை மண்ணைக் கவ்வி இருக்கின்றன. காங்கிரûஸப் பற்றி சொல்லவே வேண்டாம். வாக்காளர்களிடம்தான் என்னவொரு தெளிவு...
கடந்த மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் ஒரு மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பூத் வாரியான வாக்குகளைப் பதிவு செய்து காட்டுகின்ற படிவம் 20-ல் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்குக் கிடைத்த வாக்குகளைக் காங்கிரஸ் வேட்பாளரான மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும், அவரது வாக்குகளை ராஜகண்ணப்பனுக்கும் மாற்றி எழுதி, காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதா. யார் கண்டது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணியின் முழு வெற்றியே இப்படி ஒரு தில்லுமுல்லால் பெறப்பட்டதுதானோ என்னவோ? சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அப்படி ஓர் ஐயத்தை எழுப்புகிறதே...
தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் தரப்பட்டிருக்கும் தண்டனை என்றால், திறமையான அதேநேரத்தில் நேர்மையான நிர்வாகம், மக்களின் உணர்வுகளையும், பிரச்னைகளையும் பிரதிபலிக்கும் ஆட்சி, கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய குடும்ப ஆதிக்கமும், தலையீடும் இவையெல்லாம் இல்லாமல், கேவலம், பணத்தையும், இலவசங்களையும் காட்டி இனிமேலும் யாரும் எங்களை ஏமாற்ற முடியாது என்பது அதிமுகவுக்கும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் செல்வி. ஜெயலலிதாவுக்கும் அவர்கள் உணர்த்தும் பாடம்.
""தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!'' என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை ""தினமணி'' பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது!
பறிகொடுத்த திமுக கூட்டணி-அதிர்ச்சியில் மு.க. அழகிரி
தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு திமுக, காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து தனிப்பெருபான்மையின்றி ஆட்சியை கைப்பற்றியது. மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் இல்லாமல் மைனாரிட்டி அரசாக இருந்து பல்வேறு, சலுகைகள் திட்டங்களை கொண்டு வந்தாலும் இடை இடையே பல குழப்பங்கள், அதிமுக எம்எல்ஏக்கள், மதிமுக எம்எல்ஏக்கள் கட்சித் தாவல், இடைத்தேர்தல் இப்படி குழப்ப சூழ்நிலைகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும், வாதத்திறமையால் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெறுவதை போல் திமுக அணி தன்னை ஒரு வலுவான ஆளும் கட்சியாக பல்வேறு தருணங்களில் காட்டி கொண்டு அதிகாரத்தை பலப்படுத்தி மத்திய அரசையை ஆட்டி படைத்தது.
காரணம் பிரதான எதிர்கட்சியான அதிமுக வலுவிழந்து விட்டதாக ஒரு கற்பனை காட்சி சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்த வலுவிழந்துள்ளதாக நிலைப்பாடுதான் தமிழகத்திலுள்ள திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை மக்களிடமிருந்து வேறுபடுத்திட என்பதை விட விலகிட வழி வகுத்தது. திமுக அமைச்சர்களாகட்டும், சபாநாயகராட்டும், எம்எல்ஏக்களாகட்டும் யாரையும் மக்கள் நெருங்க முடியாத நிலைக்கு ஆட்படுத்தியது.
2006ல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமசந்திரன், 15 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் கீதாஜூவன், 7 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் பூங்கோதை, 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சபாநாயகர் ஆவுடையப்பன், 11 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆகியோர் பெரும் தோல்வியை சந்தித்தனர். எம்எல்ஏக்களில் காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ், கருப்பசாமி பாண்டியன், வசந்தகுமார், உள்ளிட்டோர் அமைச்சர்களாகவே தங்களை கருதி கொண்டு தனி ஆவர்த்தனம் செய்ததும் தொண்டர்களையும், மக்களையும் மதிக்காத நிலைப்பாடு ஒரு புறம் இருந்தாலும் கருப்பசாமி பாண்டியன், மாலைராஜா, ஆவுடையப்பன் உள்ளிட்டோர் மணல் ராஜாங்கத்தில் கொடிகட்டி பறந்ததும் ஒரு பெரும் காரணம் இவர்கள் தோல்விக்கு உண்டு.
கடந்த தேர்தலில் 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தேற்கடித்து வெற்றி பெற்ற அமைச்சரான மைதீன்கானின் வெற்றி இம்முறை வெறும் 605 வாக்குகளில் தான் நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் பூங்கோதை தோல்வியும் 279 வித்தியாசத்தில்தான். அதிமுக அணியில் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டையை தவிர அனைத்து தொகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் தவிர அனைத்து தொகுதிகளிலும், குமரி மாவட்டத்தில் 2 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றியை தட்டி பறித்துள்ளது. தென் மாவட்டங்களிலுள்ள 58 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அழகிரி அசைமெண்டின்படி திருமங்கலம் பார்மூலாப்படி வெற்றியை தக்க வைக்கலாம் என கருதி காய நகர்த்திய திமுகவுக்கு பெருத்த அடி விழுந்துள்ளது. 47 தொகுதிகளை இழந்துள்ளது திமுக. ஒட்டு மொத்ததில் தென் மாவட்டத்தில் திமுக அணி தோல்வியை தழுவியதற்கு காரணம் மணல் பிரச்சனை, மின் தட்டுபாடு, வேலைவாய்ப்பின்மை, எம்எல்ஏக்கள் மக்களோடு நெருங்காமல் ஒதுங்கியது, கூடவே ஸ்பெக்டரம் மோசடி போன்றவை மக்களை வெறுப்படைய செய்ததும் குறிப்பிடத்தக்கது.
மொத்ததில் எதிர்பார்க்காத வெற்றியை அதிமுகவும், எதிர்பார்க்காத தோல்வியை திமுகவும் தென்மாவட்டத்தில் சந்தித்துள்ளது.

சாதனை' படைத்த வீரபாண்டியார்!!
தமிழக அமைச்சர்கள் 28 பேரில் 21 பேர் படுதோல்வியடைந்துள்ளனர். அவர்களில் அதிகஅளவிலான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியவர் சேலத்தைச் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம்தான்.
தமிழக அமைச்சர்களில் முதல்வர் கருணாநிதி உள்பட மொத்தம் 28 அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களில் 9 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.தோல்வி அடைந்த அமைச்சர்களில் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தவர் வீரபாண்டி ஆறுமுகம்தான். அவரை அவரது சகோதரரின் மகளான விஜயலட்சுமி பழனிச்சாமி, சங்ககிரி தொகுதியில் வீழ்த்தினார். விஜயலட்சுமிக்கு 1,05,502 ஓட்டுகளும், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு 70,423 ஓட்டுகளும் கிடைத்தன இதே போல வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரனும் தேர்தலில் தோல்வியை சந்தித்தார். வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்ட அவர் 26,498 வாக்குகள் வித்தியாசத்தில் சேலம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.கே. செல்வத்திடம் தோற்றார். இவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மற்றொரு சகோதரரின் மகன் ஆவார்
தோல்வி அடைந்த அமைச்சர்களில் பிறர்... கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்), பரிதிஇளம்வழுதி (எழும்பூர்), தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்), க.பொன்முடி (விழுப்புரம்), கே.என்.நேரு (திருச்சி தெற்கு), என்.செல்வராஜ் (மணச்சநல்லூர்), எஸ்.என்.எம்.உபயதுல்லா (தஞ்சாவூர்), கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), கீதா ஜீவன் (தூத்துக்குடி), பூங்கோதை ஆலடி அருணா (ஆலங்குளம்), சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி), பொங்கலூர் நா.பழனிச்சாமி (கோவை தெற்கு), உ.மதிவாணன் (கீழ்வேளூர்), தமிழரசி (மானாமதுரை), மு.பெ.சாமிநாதன் (மடத்துக்குளம்), எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (குறிஞ்சிப்பாடி).
சபாநாயகரும் காலி- துணை சபாநாயகரும் தோல்வி அதேபோல சபாநாயகர் ஆவுடையப்பனும், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியும் கூட தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். சபாநாயகர் ஆவுடையப்பன், அம்பாசமுத்திரம் தொகுதியில், அதிமுகவின் இசக்கி சுப்பையாவிடம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார்.அதேபோல துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியும் ராசிபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தனபாலிடம் தோல்வியைச் சந்தித்துள்ளார்.
வீழ்ந்த பெரும் தலைகள் சிதம்பரம் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டயார் தோல்வியைச் சந்தித்தார்.அறந்தாங்கியில் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் அதிமுகவிடம் தோல்வியடைந்தார். சிறந்த பேச்சாளரான காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், கடையநல்லூர் தொகுதியில் அதிமுகவிடம் தோல்வியைச் சந்தித்தார்.

நேரில் போய் ஜெ.வுக்கு வாழ்த்து சொன்ன விஜய்!!
இந்தத் தேர்தலில் விஜயின் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. தேர்தலுக்கு முன்னதாக ஜெயலலிதாவை விஜய் நேரில் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்படியொரு சந்திப்பை தவிர்த்த விஜய், பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை. விஜய்யின் தந்தையார் சந்திரசேகர் இரு முறை ஜெயலிதாவை நேரில் சந்தித்து, பிரச்சாரத்துக்கு செல்வதாக உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து எஸ் ஏ சந்திரசேகர் நேரடியான தேர்தல் பிரச்சாரத்திலும் கலந்து கொண்டார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுகவின் அபார வெற்றி உறுதியான நிலையில், நேற்று மாலை சென்னை போயஸ் கார்டனிலுள்ள அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு சந்திரசேகருடன், நடிகர் விஜயும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்.

காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி: சீமான் !
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக காங்கிரசுக் கூட்டணி தோல்வியடைந்துள்ளது. பணபலம், அதிகார பலம், இவற்றுக்கு பணியமாட்டோம்; வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி.
வரலாறு காணாத வகையில் ஊழல், வன்முறை, குடும்ப ஆதிக்கம், அராஜகம், மணற்கொள்ளை, திரைத்துறையில் ஏகபோகம், நிர்வாகச் சீர்கேடு, இனத் துரோகம் ஆகியவற்றில் மலைக்கத் தகும் மலையாய் எழுந்து நின்றது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி. அந்த மலையை சுக்குசுக்காய் உடைத்து தரை மட்டமாக்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.
மக்களின் எதிர்ப்புக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தான் பெற்ற மக்களின் அதிகாரத்துக்காகவே ஆட்சி நடத்தினார் கருணாநிதி. மக்கள் எதிர்ப்பையும், அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்பையும் அடக்குமுறைச் சட்டங்கள் மூலமும் காவல் துறையின் ஒடுக்குமுறைகள் மூலமும் பொது அரங்கிற்குக் கொண்டு வராமல் செய்தார். இதன் பின்னும், ஓயாத திமுக காங்கிரசு அரசுகள் ஈழத்தில் எம் மக்களை பல்லாயிரக்கணக்கில் சிங்களப் பேரினவாதம் கொன்றொழிக்க பல வகையில் பேருதவி புரிந்தன. இனப்படுகொலைக்கு எதிரான எம் மக்களின் ஒப்பாரியைக்கூட யாருக்கும் கேட்காமல் அச்சுறுத்தி தடை செய்தன.
இந்த மக்கள் விரோத, இனவிரோத ஆட்சி தொடர்ந்து நீடித்தால் என்றும் மீட்க முடியாத அபாயச் சூழலில் தமிழ்நாடு சிக்கிக் கொள்ளும் நிலைமை இருந்தது. ஆனாலும் தேர்தலில் பணபலத்துடன் மக்களை விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற பாசிச ஆட்சியாளர்களின் ஆசையில் மண் அள்ளிப் போட்டிருக்கின்றார்கள் மக்கள். தி.மு.க. காங்கிரசுக் கூட்டணியைப் படு தோல்வி அடையச் செய்திருக்கின்றனர்.
ஈழத்தில் நமது ரத்த உறவுகளை சிங்களன் கொன்று குவிக்க பேருதவி புரிந்த சோனியாவின் காங்கிரசை இந்தத் தேர்தலில் முழுவதுமாக வீழ்த்த வேண்டும் என்னும் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி எடுத்தது. காங்கிரஸ் கட்சிதான் நமக்கு முதல் எதிரி. இனத்தை அழித்த காங்கிரசுக் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்படவேண்டும் என முடிவெடுத்து களத்தில் இறங்கினோம். அதற்காக அனைத்து தொகுதியிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் வீடு வீடாகச் சென்றும் காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்று தீவிரப் பரப்புரை செய்தோம். இனத்திற்காக நாம் செய்த கடமையை மக்கள் அங்கீகரித்து இன எதிரிக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர். யுத்தத்தில் எம் இனத்தை நயவஞ்சகத்தோடு வீழ்த்திய காங்கிரசை,இங்குள்ள தமிழர்கள் ரத்தம் சிந்தாத தேர்தல் யுத்தத்தில் நேர்மையுடன் வீழ்த்தியிருக்கிறார்கள். இது நம் இனத்திற்குக் கிட்டிய வெற்றி. காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி. இனத்தின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த நாம் தமிழர் உறவுகளுக்கும் இணைந்து பாடுபட்ட அனைத்து உணர்வாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனி வரும் காலங்களில் தமிழினத்திற்கு எதிரான எண்ணமோ செயலோ எந்த அரசியல் கட்சியிடம் இருந்து வெளிப்பட்டாலும் அவர்களுக்கும் இதே கதி தான் ஏற்படும். புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திறம்பட செயல்பட வாழ்த்துகிறோம்... என்று அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)