ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
22 October, 2013
ஓரியோ பிஸ்கட் சாப்பிட்டா கோகைன் மாதிரி போதை வருமாம்!
குழந்தைகளின் பிரிய பிஸ்கட் ஆகிவிட்டது ஓரியோ. இதற்கு அதிக அளவில்
செய்யப்படும் விளம்பரம். கடைக்குப் போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ
பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது.
ஓரியோ பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப்
பொருளை உண்ட உற்சாகத்தை அடைவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக கனெக்டிகட் கல்லூரியைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் ஓரியோ
பிஸ்கெட்டை எலிகளுக்கு சாப்பிடக் கொடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மூளைச் செல்களில் கோகைன் உட்கொண்டது போன்ற மாற்றம் ஏற்பட்டது.
மேலும் ஓரியோ பிஸ்கட்டில் அதிக சர்க்கரையும், அதிக கொழுப்பும்
அடங்கியிருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது போதைப் பொருளை ஒத்துள்ளது என்று
கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)