ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
15 October, 2011
இதே நாள்...
நகைச்சுவை உணர்வு ஒரு வரம்!
வாழ்க்கையின் துன்பங்களிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுதலையளிக்கும்
நபரை அனைவருக்கும் பிடிக்கும். இந்த வாழ்க்கையானது துன்பங்களால் நிறைந்தது.நாள்தோறும் ஏதேனும் ஒரு சோதனையோ
அல்லது கவலையோ ஒவ்வொரு மனிதனுக்குமே ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் மன
அழுத்தத்திலிருந்து விடுபட்டு மகிழ்ச்சி உணர்வை அடைய ஒவ்வொருவருமே
விரும்புகின்றனர். மகிழ்ச்சியை உடனடியாகவும், எப்போது வேண்டுமானாலும்
எளிதாக தரக்கூடிய ஒரு அம்சம் என்னவென்றால், நகைச்சுவை உணர்வு. இந்த
நகைச்சுவை உணர்வுள்ள மனிதர் அனைவராலும் விரும்பப்படும் ஒருவர். இவர் தனக்கு
மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் எப்போதுமே சந்தோஷத்தை தருபவராக
இருக்கிறார்.எப்போதும் தன்னை துரதிருஷ்டவாதியாகவே நினைத்துக்கொண்டு, தான் உள்ளிட்ட
எல்லோரையும் குறைகூறிக் கொண்டிருக்கும் மனிதர்களை யாரும் விரும்புவதில்லை.
உருளுவது தலையா, தலைப்பாகையா?
19ம் நூற்றாண்டில், ஈரான் நாட்டில் பஹாய் சமயத்தைச் சார்ந்த ஒருவருக்கு
பொய்யான குற்றச்சாட்டின் பெயரில் அந்நாட்டின் ஷியா அரசாங்கம் அவருக்கு மரண
தண்டனை விதித்தது. சிரச்சேதத்தின் மூலம் அந்த மரண தண்டனையை நிறைவேற்றத்
திட்டம். களத்திற்கு கொண்டுசென்று அவரது குனிந்த தலையை கொலையாளி
வெட்டுகையில் குறி தவறி அவரின் தலைப்பாகையின் மீது கத்திப் பட்டு அந்த
தலைப்பாகை உருண்டு ஓடியது. அந்த சூழ்நிலையிலும் அந்த பஹாய்
சிரித்துக்கொண்டே கூறியதாவது, "உருண்டு ஓடுவது எனது தலையா அல்லது
தலைப்பாகையா?" என்பதுதான். தனது உயிர்போகும் தருவாயில்கூட, தனது நகைச்சுவை
உணர்வின் மூலம் அந்த இடத்தில் கலகலப்பைக் கொண்டு வந்தார். இதுபோன்ற ஒரு
மனிதர் அநியாயமாக இறக்கிறாரே என்று அங்கிருந்த காவலர்களில் யாரேனும் ஒருவர்
நிச்சயம் வருந்தியிருக்கக்கூடும். நகைச்சுவை உணர்வானது ஒரு மனிதனை எந்த
சூழலிலும் சந்தோஷமாக வைக்கும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் புலனாகிறது.முகலாய பேரரசர் அக்பர் கூட நகைச்சுவை உணர்வுகொண்ட பீர்பாலை தனது
அமைச்சர்களில் ஒருவராக ஆக்கிக் கொண்டார். மிகப்பெரிய பேரரசை பலவித
நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆண்ட அக்பருக்கு, பீர்பால் போன்றவர்களின்
நகைச்சுவை உணர்வு சந்தோஷத்தையும், நிம்மதியையும் அளித்தது.
வித்தியாசம் அறியுங்கள்
நகைச்சுவை உணர்வு என்றால் என்ன என்பதைப் பற்றி ஒரு தெளிவான புரிதல்
இருப்பது முக்கியம். பிறரை கேலியும், கிண்டலும் செய்வது(பல திரைப்படங்களில்
வருவதுபோல்) நகைச்சுவையல்ல. அதெல்லாம் திரைப்படங்களுக்குத்தான்
ஒத்துவரும். நிஜ வாழ்வில் நகைச்சுவை என்பது நமது எதிரியைக்கூட நண்பராக
மாற்றுவதாய் இருக்க வேண்டும். பிறரை ஏளனம் செய்வதற்கும், நகைச்சுவை
உணர்வுக்கும் சமயத்தில் வித்தியாசம் என்பது மிகவும் குறைவாக இருப்பதுபோல்
தோன்றும். ஆனாலும் அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது முக்கியம். இதை
மட்டும் நீங்கள் அறிந்துவிட்டால், மிகவும் வெற்றிகரமான மனிதராக நீங்கள்
இருப்பீர்கள்.நகைச்சுவை உணர்வில் இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில், நமது
குறைகளின் மீது நாமே சிரித்துக் கொள்வதாகும். நமது குறைகளை உணர்ந்து நாமே
சிரித்துக் கொள்வதன் மூலம் அது நாளடைவில் திருத்தப்படும். இதன்மூலம்
மற்றவர்கள் அதைப்பார்த்து சிரிப்பதை தவிர்க்கலாம்.
ஒருவேளையில் ஈடுபட்டிருக்கும்போது சீரியசாக இருக்க வேண்டும் என்று
பலரும் பொதுவாக அறிவுரை சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
அப்படியென்றால், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, பிறரிடம்கூட எதையும்
பேசாமல் இருந்து, நமது வேலையைப் பற்றி மட்டுமே பேசுவது என்று அர்த்தமல்ல.
அப்படியெனில், அதுபோன்ற ஆலோசனைகளை உதறித் தள்ளவும். உலகின் பல வெற்றிகரமான
தொழிலதிபர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுள்ளவர்கள்.
சில முக்கிய நன்மைகள்
* நல்ல நகைச்சுவை உணர்வானது, தகவல்தொடர்பில் உள்ள தடைகளைத் தகர்த்து,
நீங்கள் ஒரு அணுகக்கூடிய நபர்தான் என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கிறது.* தப்பெண்ணங்களைத் தடுத்து, நட்புரீதியான சூழலை உருவாக்குகிறது.
* அகந்தையைக் கலைந்து நம்பிக்கையை அதிகரிக்கிறது.
* மற்றவர்களின் உணர்வுகள் புண்படாமல், சிலவகை செய்திகளைத் தெரிவிக்க, நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு உதவுகிறது.
* பகைமை மற்றும் தப்பெண்ணம் போன்றவைகளின் கடும் எதிரியாக நகைச்சுவை உணர்வு விளங்குகிறது.
* பிறரின் மீது நேர்மறை எண்ணத்தையும் வழங்குகிறது.
நகைச்சுவை உணர்வு வாழ்வில் இந்தளவிற்கு நன்மைகளை வழங்குகையில், அதை நாம்
ஏன் முயற்சிக்கக்கூடாது? உண்மையில் அது எளிதான விஷயமில்லைதான். சரியான
நேரத்தில் சரியான இடத்தில் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவது உண்மையிலேயே
ஒரு மாபெரும் கலை. இது சிலருக்கு இயல்பிலேயே இருக்கும். பலர் இந்தக் கலையை
முயற்சி செய்துதான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்வதற்கான சில எளிய வழிமுறைகள்
* ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் அல்லது விழாவில் கலந்துகொள்ளும்போது,
நகைச்சுவையான விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் உங்களின்
மனநிலையை தயார்படுத்திக் கொள்ளவும். முடிந்தளவு நன்றாக உடையணிந்து
கொள்ளவும்.
* நகைச்சுவையான உரையாடல்கள் தகவல்தொடர்பு தடைகளை உடைக்கும் என்றிருக்கையில், கடுஞ்சொற்களை உபயோகப்படுத்தாமல் இருக்க முயலவும்.
* உரையாடலின்போது, ஒரு வரி நகைச்சுவைகள் சிலவற்றை தயார்செய்து வைத்துக்கொள்ளவும்.
* உங்களின் நகைச்சுவைக்கு நீங்களே சிரித்துக்கொள்ள வேண்டாம். மற்றவர்கள் சிரிக்கட்டும்.
* ஒரு இடத்தில் நகைச்சுவை உணர்வை உருவாக்க, தேவைப்பட்டால் பழைய ஜோக்குகள், நகைச்சுவை உதாரணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.
* மேலும், நீங்கள் இப்போது ஜோக் சொல்லப் போகிறீர்கள் என்று யாரும் முன்னறிவிப்பு செய்ய வேண்டாம்.
* பன்ச் லைன் கொடுக்கத் தவற வேண்டாம். ஏனெனில் மக்கள் அனைத்திற்குமே சிரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
* ஒரு இடத்தில் ஒரு அவசரமான விவாதம் நடக்கையிலோ, ஒரு கூட்டத்தை
நடத்துபவர், உறுப்பினர்களின் தீவிர கவனத்தைக் கவர விரும்பினாலோ, அந்த
இடத்தில் நகைச்சுவையாகப் பேச வேண்டாம்.
குறிப்பு: உங்களின் நகைச்சுவை உணர்வானது, மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்குத்தான்
என்றில்லை. எப்போதும் தன்னம்பிக்கையாக இருப்பதற்கும், சுய கவலையிலிருந்து
விடுபடவும், கஷ்டங்களை மறக்கவும், கவலையைப் போக்கவும் உங்களுக்கே உங்களின்
நகைச்சுவை உணர்வு துணைபுரியும். நீங்கள் மேடையேறி பேசும் நகைச்சுவையாளராக
இருக்க வேண்டியதில்லை. உங்களையும், உம்மைச் சுற்றியுள்ள சில நபர்களையும்
சந்தோஷப்படுத்தினாலே போதும். வாழ்க்கை என்றும் இனிக்கும்.
குழந்தைகளுக்கு சூரிய ஒளி அவசியம்!
கிராமங்களில் குறைந்தது இரண்டடி அகலமாவது விட்டு வீடுகள்
கட்டப்பட்டிருக்கும். சந்து என்று அதற்கு பெயர். வீட்டுச்சுவர்களில் ஜன்னல்
வைக்க வசதியாகவே இவ்வாறு தனித்தனியாக வீடுகள் கட்டப்பட்டன. இந்த ஜன்னல்கள்
வழியே சூரிய ஒளி ஊடுருவி அனைவரையும் தொட்டுச்செல்லும். ஆனால்
நகர்புறங்களில் ஒன்றுடன் ஒன்று ஒட்டியும் சரியான காற்றோட்ட வசதியின்றியும்,
ஒன்றன் மீது ஒன்றாக வீடுகள் அடுக்கு மாடி குடியிருப்புகளாக
கட்டப்படுகின்றன. என்னதான் வீட்டு முன்பு காலியிடம் விட்டு பூங்கா அமைக்க
வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தாலும் அபார்ட்மென்ட் குழந்தைகள் யாரும்
அதில் விளையாடுவதில்லை. இதனாலேயே அபார்ட்மென்ட்டில் வசிக்கும்
குழந்தைகளுக்கு எலும்பு பாதிப்பு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன.
அபார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்றழைக்கப்படும் இந்த புதிய குறைபாடு அடுக்கு
மாடி குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகள் மத்தியில் அதிகம்
காணப்படுகிறது. குழந்தைகளில் எலும்புகளை முற்றிலும் பாதிக்கும் புது
பிரச்சினையாக இந்நோய் உருவெடுத்துள்ளது.
இந்நோய் எப்படி ஏற்படுகிறது: இதன்
விளைவாகத்தான் சென்னை போன்ற மாநகரங்களில் சிறிய இடங்களில் அடுக்கு மாடி
குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. வேலை நிமித்தமாக பெரும்பாலோனோர்
பெருநகரங்களில் குடியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதால்
இடப்பற்றாக்குறையினால் பலரும் அபார்ட்மென்ட்களில் வசிக்க வேண்டியுள்ளது.
போதிய காற்று, வெளிச்சம், போன்றவை குறைவு. இதனால் அடுக்குமாடி
குடியிருப்புகளில் வளரும் குழந்தைகளை அபார்ட்மென்ட் சிண்ட்ரோம் என்கிற
புதிய குறைபாடு தாக்கத் தொடங்கியுள்ளது. எளிதில் எலும்பு உடைதல், விரிசல்
ஏற்படுதல், மற்றும் ரிக்கெட், போன்ற பிரச்சினைகள் இந்த குறைபாட்டினால்
ஏற்படுகின்றன.
சூரியஒளி தேவை: அதிகாலையிலே
உடலில் படும் சூரிய ஒளி எலும்புகளுக்கு சத்தளிக்கக் கூடிய விட்டமின் டி யை
உற்பத்தி செய்கின்றன. ஆனால் சூரிய ஒளி பட்டால் கறுத்துவிடுவார்கள் என்ற
எண்ணம் மேலோங்கி இருப்பதால் குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்க
மறுக்கின்றனர். மேலும் ஏ.சி போட்டு கதவுகளை அடைத்து விடுவதால் இயற்கை
தன்மை இல்லாமல் போய் விடுகின்றது. இதனால் அடுக்கு மாடி குடியிருப்புகளில்
வசிக்கும் குழந்தைகளிடையே இக்குறைபாடு அதிகம் காணப்படுகின்றன. கிராமங்களில்
வசிக்கும் குழந்தைகள் வெயில் மழை என்றும் பாராமல் விளையாடுவதானேலே
அவர்களுக்கு இதுபோன்ற நோய்கள் தாக்குவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
வைட்டமின் டி அவசியம்: இந்நோய்
தாக்குதலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க தினமும் காலை வெயிலில் ஐந்து
முதல் பத்து நிமிடங்கள் விளையாட அனுமதிக்க வேண்டும் என்கின்றனர்
மருத்துவர்கள். இதனால் உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைப்பதுடன்
உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இதன்மூலமே அபார்ட்மெண்ட் சின்ட்ரோம் போன்ற
நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். என்கின்றனர் மருத்துவர்கள்.
ராஜபக்சேவுக்கு 'தமிழ்நெட்' மூலம் சம்மன் - அமெரிக்க நீதிமன்றம்!
அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக தொடரப்பட்ட
வழக்கில் பிறப்பிக்கப்பட்ட சம்மனை ராஜபக்சே தொடர்ந்து வாங்க மறுத்ததால்,
அதனை தமிழ்நெட் இணையத்தில் வெளியிடமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில்
மகிந்த ராஜபக்சே மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை
பெரும்பாலும் போர்க்குற்ற வழக்குகளே. இவற்றின் மீது பிறப்பிக்கப்படும்
அழைப்பாணை (சம்மன்) எதையும் ராஜபக்சேவோ இலங்கை அரசோ பெற்றுக் கொள்ளாமல்
திருப்பியனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வழக்குகளுக்கு
தமிழர்கள் சார்பில் ஆஜராகும் புரூஸ் பெஃயின் யோசனையின்படி புதிய
உத்தரவொன்றை அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோடெல்லி
பிறப்பித்துள்ளார்.
டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் என்பவர்
ராஜபக்சேவுக்கு எதிராக ஒரு போர்க்குற்ற வழக்கை தொடர்ந்துள்ளார். அவரது
உறவினர்களை சர்வதேச போர் விதிகளுக்கு முரணாக ராஜபக்சேயின் உத்தரவுப்படி
ராணுவம் கொன்றுவிட்டதாக வழக்கை தொடர்ந்திருந்தார். இவ்வழக்கிற்கு
நீதிமன்றத்தால் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அதனை ஏற்க மகிந்த
ராஜபக்சே மறுத்துவிட்டார். எனவே இது தொடர்பான கடிதங்கள் மற்றும் சம்மனை
திருப்பி அனுப்பியது அலரி மாளிகை. எனவே இந்த சம்மனை அவருக்கு வழங்குவதில்
சிக்கல் ஏற்பட்டது. அமெரிக்க சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட வழக்கு குறித்து நிச்சயம் அறிந்திருக்கவேண்டும். அழைப்பாணையை
அனுப்புவதன் மூலமோ இல்லை கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலமோ
குற்றஞ்சாட்டப்படும் நபர் தனக்கு எதிராக நீதிமன்றில் ஒரு வழக்கு
தொடரப்பட்டுள்ளதை அறியவேண்டும்.
ஆனால் ராஜபக்சே இதனை அறிய
மறுப்பதால், இலங்கையில் இருந்து வெளிவரும் 2 பத்திரிகையில் முதல்
பக்கத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள சம்மனை
முதல்பக்கத்தில் விளம்பரமாக பிரசுரிக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார். மேலும்
தமிழ் நெட் இணையத்திலும் பிரசுரிக்கும் வகையில் இந்த உத்தரவு இருக்க
வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு
உத்தரவை வழங்கியுள்ளது.
இதன்படி ராஜபக்சேவுக்கு எதிரான சம்மனை தமிழ்
நெட் இணையமும் இலங்கையில் இருந்து வெளியாகும் 2 பத்திரிகைகளும்
பிரசுரித்துள்ளன. இதன் மூலம் ராஜபக்சே மீது அமெரிக்காவில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
எனவே
அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் ஆஜராகி அல்லது தன் சார்பில்
வழக்கறிஞர் வைத்து அவர் தனது விளக்கத்தைச் சொல்லியாக வேண்டும். ஒருவேளை அவர் இதையும் கண்டுகொள்ளாமல் விட்டால் பல பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். உண்மையில்
இந்த வழக்கை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவே ராஜபக்சே திட்டமிட்டார். ஆனால்
ப்ரூஸ் பெயினின் இந்த புதிய திட்டம் காரணமாக இனி தப்ப முடியாது எனும்
அளவுக்கு சிக்கலில் மாட்டியுள்ளார் ராஜபக்சே.
சட்டவிரோதமாக நிலப் பகுதிகள் தோண்டப்படுவதால், உலக புகழ்பெற்ற சீனப் பெரும் சுவரின் பல பகுதிகள் இடிந்து சேதமடைந்துள்ளதாக சீன அதிர்ச்சி!
கி.பி.3ம் நூற்றாண்டில் மிங் என்ற மன்னரால் கட்டப்பட்டது சீனப்
பெரும்சுவர். தற்போது உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள இந்த சுவரை காண,
உலகின் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மொத்தம்
5,500 மைல் நீளம் கொண்ட இந்த பெருஞ்சுவர் சீன நாட்டின் 11 மாகாணங்களின்
வழியாக செல்கிறது. சந்திரனிலிருந்து பூமியை பார்க்கும் போது மனித
படைப்பாக பூமியில் தெரிவது இந்த சீனா பெரும் சுவர் மட்டுமே. இத்தனை
சிறப்புகளை கொண்ட சீனா பெருஞ்சுவர் தற்போது ஆங்காங்கே இடிந்து சேதமடைந்து
வருகிறது.
இதற்கு முக்கிய காரணமாக பெருஞ்சுவரை ஒட்டியுள்ள
பகுதிகளில் பழங்காலத்து தங்கம், வெள்ளி விலையுயர்ந்த பொருட்கள்
புதைக்கப்பட்டிருப்பதாக உள்ள நம்பிக்கை ஆகும். இதை கைப்பற்ற அப்பகுதியில்
பலரும், சட்டவிரோதமான முறையில் தோண்டி வருகின்றனர்.
இதுமட்டுமின்றி,
தட்பவெப்ப நிலை மற்றும் சீனா-ஜப்பான் நாடுகளிடையே நடந்த போரின்
அதிகளவிலான சுவர் பகுதிகள் சேதமடைந்தன. சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள
ஹிபிய் மாகாணத்தில் பெருஞ்சுவர் 80 சதவீதம் பகுதிகள் இடிந்துவிட்டது.
இதற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் பராமரிப்பின்றி
விடப்பட்டதே காரணம் என தெரிகிறது.
இதுகுறித்து ஹிபிய் மாகாணத்தை
சேர்ந்த கட்டக்கலை நிபுணர் ஒருவர் கூறியதாவது, சுவரை சுற்றிலும் எத்தனை
இடங்களில் மக்கள் தோண்டி வருகிறார் என தெரியவில்லை. வரலாற்று சிறப்புமிக்க
இந்த சுவரை பாதுக்காக்க, சீனா அரசு தான் முயற்சிகள் எடுக்க வேண்டும்,
என்றார்.
நில மோசடி வழக்கு எதியூரப்பா கைது!
பெருமளவில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு
அடிமாட்டு விலைக்கு முறைகேடாக ஒதுக்கிய வழக்கில், கர்நாடக பாஜக மாஜி
முதல்வர் எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை லோக் ஆயுக்தா நீதிமன்றம்
நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவர் இன்று பெரும் 'டிராமாவுக்கு' பின்
கைது செய்யப்பட்டார். இந்த நில மோசடி விவகாரத்தில் எதியூரப்பா,
அவரது மகன் விஜயேந்திரா, ராகவேந்திரா மருமகன் சோகன்குமார் உட்பட 5 பேர்
மீது லோக் ஆயுக்தா வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி
இவர்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால்,
இன்று இந்த மனுவை விசாரித்த லோக் ஆயுக்தா நீதிமன்றம் எதியூரப்பாவின்
ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் எதியூரப்பாவின்
மகன்கள் மற்றும் மருமகனுக்கு ஜாமீன் வழங்கியது.
எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டது. இதையடுத்து
அவரைக் கைது செய்ய 2 லோக் ஆயுக்தா டிஎஸ்பிக்கள் அவரது ரேஸ்கோர்ஸ்
வீட்டுக்கு விரைந்தனர். ஆனால், எதியூரப்பா அந்த வீட்டில் இல்லை. இதையடுத்து இன்னொரு போலீஸ் டீம் எதியூரப்பாவின் டாலர்ஸ் காலனி வீட்டுக்குச் சென்றது. ஆனால், அங்கேயேயும் அவர் இல்லை.
இதனால்
அவர் பெங்களூரிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள தும்கூர் சென்றுவிட்டதாக
தகவல் பரவியது. இதையடுத்து அங்கேயும் அவரைத் தேடி லோக் ஆயுக்தா போலீஸ்
குழு சென்றது. தும்கூரில் உள்ள மடங்களுக்கு எதியூரப்பா அடிக்கடி சென்று
வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கைது நடவடிக்கைக்கு
எதிராக உயர் நீதிமன்றத்தை வரும் திங்கள்கிழமை அணுகவும், அதுவரை கைதாகாமல்
இருக்கவும் எதியூரப்பா முயன்று வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்
நிலையில் எதியூரப்பாவை பல இடங்களிலும் லோக் ஆயுக்தா போலீசார் தேடிக்
கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் மாலையில் பெங்களூர் லோக் ஆயுக்தா
நீதிமன்றத்தில் நீதிபதி சுதீந்திர ராவ் முன் சரணடைந்தார். இதையடுத்து அவரை
வரும் 22ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்
தொடர்ந்து நீதிமன்றத்தின் பின் பக்க வாசல் வழியாக அவர் ஒசூர் ரோட்டில்
உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக
இன்றைய விசாரணையின் போது எதியூரப்பா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்
முதுகு வலி காரணமாக ஆஜராகவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால்,
முதுகு வலியை வைத்துக் கொண்டு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் எப்படி
ஈடுபட்டார் என எதிர்த் தரப்பு வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் கேள்வி
எழுப்பினார். எதியூரப்பா இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தால், அங்கேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே
இன்று எதியூரப்பாவைக் கைது செய்ய போலீசார் அவரது வீடுகளுக்கு வந்தபோது,
ஒரு அமைச்சரோ அல்லது எம்எல்ஏவோ கூட அங்கு வரவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தக் கைது நடவடிக்கை குறித்தும்,
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் உள்துறை அமைச்சர் அசோக் மற்றும்
பெங்களூர் நகர போலீஸ் கமிஷ்னருடன் முதல்வர் சதானந்த கெளடா ஆலோசனை
நடத்தினார்.
WHEN THE UNKNOWN TRUTH!!!!!! REVEALED ...!
Rahul Gandhi, Congress Member, Parliament
of India ,representing the youth of Congress Party is been charged for
raping a girl named Ms.Sukanya who happened to be daughter of Congress
worker....A HIDDEN STORY- Sources are given below. The story is entirely based on the sources researched, which are given below.
Subscribe to:
Posts (Atom)