|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 March, 2012

இந்த வாரபலன் 16-3-2012 முதல் 22-3-12 வரை

மேஷம் பொது: வெற்றிகரமான வாரம். எடு்க்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். கவலைகள் படிப்படியாகக் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வேலைக்கு போகும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம்.

ரிஷபம் பொது: நன்மையான வாரம். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புனித பயணங்கள் மேற்கொள்ளக்கூடும்.

பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரி்க்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி மகிழக்கூடும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கும். வேலை பளு குறையும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது நிதானமாகப் பேசவும். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.

மிதுனம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் அதிக முயற்சிக்குப் பிறகு தான் வெற்றி பெறும். பண வரவு சீராக இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். உடல் நலம் நன்றாக இருக்கும். உடன் பிறப்புகள் பாசமாக இருப்பார்கள்.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். அலுவலகத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசாமல் இருப்பது நல்லது.

கடகம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. உங்கள் பொறுமையால் எதையும் சாதிப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு அலுவலகத்திலேயே அதிக செல்வாக்குள்ள பதவி கிடைத்து மகிழலாம். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் ஒரு சில வேலைகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறக்கூடும். வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம் பொது: குதூகலமான வாரம். எடுக்கும் காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். மனதில் புது தெம்பு பிறக்கும். பயணங்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த முக்கிய தகவல் வந்து மகிழ்விக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். மகன் அல்லது மகளுக்கு புதிய வேலை கிடைக்கலாம். வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள்.

கன்னி பொது: முன்னேற்றமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். கணவருடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று வரக்கூடும். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். அடுத்தவர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை.

துலாம் பொது: அதிர்ஷ்டகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலம் நன்றாக இருக்கும். பயணங்களால் நன்மை உண்டு. யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். கன்னிப் பெணகளுக்கு திருமணம் கைகூடும். வருமானம் நன்றாக இருக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகளால் சந்தோஷம் காண்பீர்கள். வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். அதனால் அவர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

விருச்சிகம் பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வீடு மாற்ற இது உகந்த வாரம். வீண் செலவுகளைக் குறைக்கவும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செலுத்தவும். பேச்சில் நிதானம் தேவை. வேலைக்கு போகும் பெண்களுக்கு பணவரவு உண்டு. வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். பணி நிமித்த பயணங்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும்.

தனுசு பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலம் நன்றாக இருக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.

பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். உங்கள் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த கடன் தொகை கிடைத்து மகிழ்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

மகரம் பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். நீண்ட நாள் பார்க்காத நண்பரை சந்தித்து மகிழக்கூடும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழக்கூடும். கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரி்ககும். உடல் நலம் மேம்படும். பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. இல்லையென்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகலாம். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம். 

கும்பம் பொது: சந்தோஷமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் எளிதில் முடியும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும்.

பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். நல்லவர்கள் மூலம் நல்ல செய்தி வந்து மகிழ்விக்கும். வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. வேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும். சக ஊழியர்கள் ஆதரவு சுமாராகத் தான் இருக்கும். யாரைப் பற்றியும் விமர்சிக்க வேண்டாம்.

மீனம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வருமானம் அதிகரிக்கும். நல்ல செய்தி வீடு தேடி வந்து மகிழ்விக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். திருப்பணிகளுக்கு செலவு செய்யக்கூடும். தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படலாம். கணவரை அனுசரித்துச் செல்லவும்.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். சிலருக்கு அலுவலகத்திலேயே செல்வாக்கு அதிகமுள்ள பதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்ளவும். 

எம்ஜிஆர் எப்போதுமே கிங்குதான்!


முன்பெல்லாம் எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் ரிலீஸாகும்போது தமிழகமே போர்க்கோலம் பூண்டிருக்கும். அப்படியொரு ஆர்வத்துடன் தியேட்டர்கள் முன் திரண்டு நிற்பார்கள் ரசிகர்கள்.பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் அப்படியொரு காட்சியை இன்று பார்க்க முடிந்தது.இன்று ஒரே நாளில் எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் படமும் சிவாஜியின் கர்ணன் படமும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளியாகின்றன.
எம்ஜிஆர் நடிப்பில் வெளியான குடியிருந்தகோயில், அவரது நடிப்பில் புதிய பரிமாணத்தைக் காட்டிய படம். இரட்டை வேடங்களில் ஜொலிப்பார் எம்ஜிஆர். இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடி ஜெயலலிதா. இருவரின் ஜோடிப் பொருத்தமும் அசத்தலாக இருக்கும். அன்றைய நாட்களில் வசூலில் புதிய சாதனைப் படைத்தது குடியிருந்த கோயில்.சிவாஜியின் கர்ணன் படம் பிரமாண்டமான அரங்க அமைப்பு, சிவாஜி நடிப்புக்காக பெரிதாகப் பேசப்பட்டாலும், அன்றைக்கு வசூலில் பெரிதாகப் போகவில்லை. இந்தப் படத்தால் வந்த நஷ்டத்தை, எம்ஜிஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன் படம் எடுத்துதான் ஈடுகட்டினார் இயக்குநரும் தயாரிப்பாளருமான பிஆர் பந்துலு.சிவாஜியின் ரசிகர்கள் சிலர் ஒன்றிணைந்து கர்ணன் படத்தை டிஜிட்டலில் வெளியிட்டுள்ளனர்.இன்று படம் வெளியான அரங்குகளில் இரு தரப்பு ரசிகர்களும் வரிசையில் நின்று படத்துக்கு டிக்கெட் வாங்கிப் பார்த்தனர். குறிப்பாக உட்லண்ட்ஸ் திரையரங்கில் ஏகக் கூட்டம். கர்ணன் படத்துக்காவது கடந்த ஒரு மாதமாக விளம்பரம் செய்து வந்தார்கள்.
ஆனால் குடியிருந்த கோயிலுக்கோ எந்த விளம்பரமும் இல்லை. நான்கு நாட்களாகத்தான் ஏற்பாடு செய்தனர். ஆனால் உட்லண்ட்ஸ் அரங்கம் நிரம்பி வழிந்தது. எம்.ஜி.ஆரின் கட்அவுட் வைத்து பேனர், கொடி தோரணம் கட்டியிருந்தனர். பட்டாசு வெடி அமர்க்களப்பட்டது.ராயபுரம் இரா. ஆனந்தன், எல். கலைவாணன், எம்.பூபாலன், முரளி, வெங்கட் உள்ளிட்ட எம்.ஜி.ஆர். ரசிகர்கள் டிக்கெட் எடுக்க கியூவில் நின்றவர்களுக்கு இனிப்பு வழங்கினர். எம்ஜிஆர் எப்போதுமே கிங்குதான்! 

நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு 20 குறும்படங்கள்.


தமிழ் திரைப்பட விழா 2012-க்கான குறும்பட போட்டிப் பிரிவுக்கு 20 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவுக்கென்றே உலக அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. வரும் ஏப்ரல் 25 முதல் 29 வரை நடக்கிறது. இந்த விழாவின் முடிவில் சிறந்த திரைப்படத்துக்கு தமிழர் விருதும், சிறந்த நடிகர் - நடிகை, தொழில் நுட்பக் கலைஞர்கள், சிறந்த இயக்குநருக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.  விழாவின் முக்கிய நிகழ்வு சிறந்த தமிழ் குறும்படங்களை சர்வதேச பார்வையாளர்களுக்கு திரையிடுவது.

குறும்படங்கள் தேர்வு குறித்து திரைப்பட விழாவின் இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் கூறுகையில், "இந்த ஆண்டு விழா பற்றிய அறிவிப்பு வெளியானதுமே ஏராளமான படைப்பாளிகள் தங்கள் படங்களை விழா குழுவினருக்கு அனுப்பிய வண்ணம் இருந்தனர். இறுதித் தேதிக்குப் பிறகும்கூட பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படங்களை அனுப்பலாமா... சேர்க்க முடியுமா என கேட்டவண்ணம் இருந்தது, இந்த விழாவின் பெருமையை பறைசாற்றுவதாக இருந்தது.ஆழந்த பரிசீலனைக்குப் பிறகு நார்வே தமிழ் திரைப்பட விழா நடுவர் குழு 20 குறும்படங்களை தேர்வு செய்ததது.
அவை:

தி மெசையா (ஷரத் ஜோதி)
கல் (மஞ்சுநாதன் எஸ்)
ரோட்சைட் அம்பானிஸ் (கமல் சேது)
துருவ நட்சத்திரம் (அரவிந்த் சுப்ரமணியன்)
நானும் ஒரு பெண் (வி ராமநாதன்)
அண்ட் ஷி ப்ளைஸ் (முகில் சந்திரன்)
ஸ்கூல் சப்பாத்து (மகேஸ்வரன் பாலகிருஷ்ணன்)
நகல் (பொன் தயா)
பூச்சாண்டி (சைமன் ஜார்ஜ்)
காட்டு மூங்கில் (விகடகவி)
பராசக்தி (ஆர்த்தி மங்களா)
துவந்த யுத்தம் (எஸ் அசோக்குமார்)
கள்ளத்தோணி (அருள் எழிலன்)
மூன்றாம் தமிழ் (ரா பச்சமுத்து)
ஆக்ஷன் (புஷ்கின் ராஜா)
அவன் (ரூபஸ் ஜெ)
விடுமுறை வேண்டி (சதீஷ் குமார்)
உயிரோசை (பிரபு துரைராஜ்)
யார் (கணேஷ் பிரபு)
பாடசாலை (பி பாஸ்கர்)

தூங்கா நகரம் - சிறப்புத் திரையிடலுக்கு தேர்வு கவுரவ் இயக்கத்தில் விமல் - அஞ்சலி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைப் பெற்ற தூங்கா நகரம் திரைப்படம் இந்த ஆண்டு நார்வே தமிழ் திரைப்பட விழாவின் சிறப்புத் திரையிடலுக்கு தேர்வாகி உள்ளது.  அன்னக்கிளி ஆர் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பச்சைக் குடை படமும் சிறப்புத் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது," என்றார்.

நார்வே தமிழ் திரைப்பட விழா நிகழ்ச்சிகள்: இந்த ஆண்டு திரைப்பட விழாவில் சிறப்பு இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து பிரபல பின்னணி பாடகி சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடுகிறார். கனடா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர்களும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.இவர்களைத் தவிர, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த 5 நாள் நிகழ்வில் பங்கேற்கின்றனர். 

ஈரான் உறவை கைவிடாவிட்டால் பொருளாதாரத் தடை


ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக ஜூன் மாதம் இறுதியில் முடிவெடுக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் ஈரானை கை கழுவுவது தொடர்பாக ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்க இந்தியா மறுக்கும்நிலையில் பொருளாதாரத் தடை விதிக்க நேரிடலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இத்தகைய எச்சரிக்கைகளுக்குப் பின்னணியில் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் ஆதரவு குழுவினரே காரணம் என்று அமெரிக்காவுக்காக இந்திய தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் காணாமல்போன 1.17 லட்சம் குழந்தைகள் விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!


 இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் காணாமல் போன 1.17 லட்சம் குழந்தைகளின் நிலைமை பற்றி உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு சாரா நிறுவனமான பச்பான் பச்சோ அந்தோலன் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அரசு சாரா நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் புல்கா , புவான் ரிப்பு ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அரசின் புள்ளிவிவரங்களின்படியே 1.17 லட்சம் குழந்தைகள் கடந்த 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரை காணாமல் போயுள்ளனர். இவர்கள் பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் ஆகியவற்றுக்காக கடத்தப்பட்டனரா? அல்லது குழந்தைத் தொழிலாளர்களாக்கப்பட்டுள்ளனரா என்ற விவரம் தெரியவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஒரு நாளைக்கு 11 குழந்தைகள் காணமல்போவதாகவும் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களில் பெரும்பாலும் காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து காணாமல் போன 1.17 லட்சம் குழந்தைகளின் நிலைமை குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடிபட்டு, சூடுபட்ட குழந்தை ஃபாலக் மாரடைப்பால் மரணம்.


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 60 நாட்களாக உயிருக்குப் போராடிய 2 வயது பெண் குழந்தை ஃபாலக் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தது.கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி 15 வயது பெண் ஒருவர் 2 வயது குழந்தை ஃபாலக்கை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தூக்கி வந்தார். அப்போது குழந்தை கோமாவில் இருந்தது. குழந்தையை யாரோ கடித்திருந்த தழும்புகளும், கன்னத்தில் இரும்பு கம்பியைக் காயவைத்து இழுத்த தழும்பும், அதனைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களும் இருந்தது. அந்த குழந்தையின் எலும்பு உடைந்திருந்தது. அதற்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதன் மூளையில் ரத்தம் கட்டியிருந்தது. 

இதையடுத்து ஃபாலக்கை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். அந்த பிஞ்சுக் குழந்தைக்கு 6 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. சில நாட்கள் உடல் நிலை மேம்படுவதும், சில நாட்கள் மோசமடைவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் ஃபாலக்கிற்கு நேற்றிரவு 9 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 9.40 மணிக்கு குழந்தை இறந்துவிட்டதாக மருததுவர்கள் அறிவித்தனர். ஃபாலக்கிற்கு ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்டிருந்ததால் அதன் இதயம் மிகவும் வலுவிழந்து இருந்ததாக அதற்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் தீபக் அகர்வால் தெரிவித்தார். கடந்த 2 மாதமாக குழந்தையைக் காப்பாற்ற போராடியும் அது இறந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  

இதே நாள்...


  • மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்க ஐநா பொதுச்சபை ஆதரவு அளித்தது(2006)
  •  திரவ எரிபொருளால் இயங்கும் முதல் ஏவுகணை மசாசுசெட்சில் செலுத்தப்பட்டது(1926)
  •  இஸ்ரேல், ஜெரிகோ நகரை அதிகாரப்பூர்வமாக பாலஸ்தீனத்திடம் ஒப்படைத்தது(2005)
  •  முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது(1942)

வெற்றிலை முக்கிய இடம் வகிப்பது ஏன்?

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை. வெற்றிலையின் காம்பைக்கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பிக்கப்படுகிறது. தேவியின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண்மை ! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தியின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண்மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாததுபோல் வெற்றிலையின்றி வழிபாடு இல்லை.  திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என்கிறார்கள். வெற்றிலைபாக்கு கொடுத்துவிட்டால் அது தாம்பூல சத்தியம். பிறகு அதை யாரும் மீறத் துணிய மாட்டார்கள், முற்காலத்தில். சிரார்த்தம் செய்யும் போதும் மற்ற சடங்குகளின் போதும் தானம் கொடுப்பவர்கள் வெற்றிலை பாக்கின் மீது உத்திரணியால் நீர் வார்த்துக் கொடுப்பது வழக்கம். வடஇந்தியாவிலும் இந்த வழக்கம் பரவலாக இருக்கிறது. வடநாட்டவர்கள், தீபாவளியன்று லக்ஷ்மி பூஜை செய்யும் போது மூன்று வெற்றிலையையும், மூன்று பாக்கையும் பூசாரி எடுத்துவைப்பார். லக்ஷ்மி, சரஸ்வதி, துர்க்காவை இது குறிக்குமாம். மாங்கல்யதாரணம் முடிந்ததும் வந்தோரனைவரும் வாழ்த்திவிட்டு விருத்துண்டு விட்டுப் புறப்படுகையில் முகூர்த்த வெற்றிலைபாக்கு கொடுக்காமல் அனுப்பமாட்டார்கள். 

திருமணத்தின்போது கணவன் மனைவி இருவருக்கும் பெண்ணின் சகோதரன் தாம்பூலம் மடித்துக் கொடுப்பது ஒரு சம்பிரதாயம். நலங்கின்போதும், முதல் இரவின் போதும் வெற்றிலை பாக்குக்கு முக்கிய இடம் உண்டு.  கம்பராமாயணத்தில் ஒரு உருக்கமானகட்டம். ராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதை. இளம் வெற்றிலையையார் மடித்து வாயில் போட ராமன் உண்பான் என்று வருந்தினாளாம். தருமன் ராஜசூய யாகம் நடத்திய போது முதல் தாம் பூலத்தை கண்ணன் பெற்றுக் கொண்டான் என்று மகாபாரதம் சொல்கிறது. திவ்ய பிரபந்தத்தில் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் எம்பெருமான் என்றென்றே கண்களில் நீர்மல்கி என்று மனம் உருகிப்பாடுகிறார் நம்மாழ்வார். காளமேகப்புலவர் ஆதி நாளில் திருவானைக்கா கோயிலில் பரிசாரகராக இருந்தாராம். அங்கே தாசியாக இருந்த மோகனாங்கி என்பவளின் அழகில் மயங்கி ஒருநாள், கோயில் பிரகாரத்திலேயே அவள் வருகைக்காக காத்திருந்த நிலையில் கண்ணயர்ந்தார். நள்ளிரவில் அகிலாண்டநாயகி அம்மன் அவர் முன் தோன்றி, தன் வாயில் இருந்த தாம்பூலத்தை அவர் வாயில் உமிழ்ந்தாளாம், அவர் அதைச் சுவைக்க, தெய்வப் பிரசாதமான தாம்பூலம் நாவில் பட்டதும் நாவன்மை பெற்ற காளமேகம், ஆசுகவி பாடுவதில் வல்லவரானாராம். இதுபோன்றே, கூத்தனூரில் தேவி சரஸ்வதி தன் வாய்த்தாம் பூலத்தின் சாறை அளித்து ஒட்டக்கூத்தரை கவி வித்தகர் ஆக்கியதாகவும் ஒரு வரலாறு உண்டு. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால்தான் வாங்கவேண்டும். மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, சுபிட்சத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது.

+1 மாணவனை மயக்கி கடத்திய டீச்சர் கைது: 15 நாள் சிறை!



சென்னை சவுகார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் தச்சராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ஜிஜெந்திரகுமார் (வயது 16). சவுகார்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த பிப்ரவரி மாதம் வீட்டுக்குச் சென்ற மாணவன் செல்போனில் எதையோ ஆர்வமாக பார்ப்பதை அறிந்த அவன் தந்தை குமார் மகன் உறங்கிய பின்னர், அந்த செல்போனை எடுத்து பார்த்துள்ளார். 

அதில் ஏராளமான ஆபாச காட்சிகள் பதிவாகி இருந்திருக்கிறது. இதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து மகனிடம் விளக்கம் கேட்டார். அவன் ஏதும் சொல்லவில்லை. இதையடுத்து மகனுடன் படிக்கும் மற்ற மாணவர்களிடம் விசாரித்துள்ளார். மாணவர்கள் ஜிஜெந்திரகுமாரிடம் மட்டும் அறிவியல் வகுப்பு ஆசிரியை குமுது என்கிற குமுதா அதிக பாசம் காட்டுவதை பலமுறை பார்த்திருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் மகனுக்கு தெரியாமல் பள்ளிக்கு அருகே போய், பள்ளி விடும் நேரத்தில் நடப்பவைகளை கண்காணித்து வந்தார். அப்போது ஒரு நாள் மாணவன் ஜிஜெந்திரகுமாரை ஆசிரியை குமுது அன்பாக அரவணைத்துச் செல்வதை பார்த்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ஆசிரியை குமுதுவிடமே இதுபற்றி கேட்டு சண்டை போட்டார். 

ஜிஜெந்திரகுமார் என் மகன் மாதிரி என்று சொல்லி அப்போது ஆசிரியை குமுது எளிதில் தப்பித்துவிட்டார். இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பள்ளி நிர்வாகத்திடம் இதுபற்றி புகார் செய்தார். அவர்கள் ஆசிரியை குமுதுவை அழைத்து விசாரித்தனர். அவர்களிடமும் ஆசிரியை குமுது அதேபோலத்தான் பதிலை சொல்லியிருக்கிறார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த மாணவனின் தந்தை மகனை மட்டும் வீட்டில் கண்டிக்க தொடங்கினார். இந்த விவகாரங்கள் இரண்டு மூன்று நாட்கள் வரை சென்றுக்கொண்டிருந்தன. திடீரென பள்ளிக்கு சென்றிருந்த ஜிஜெந்திரகுமார் ஒரு நாள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் தந்தை குமார், பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளார். நண்பர்களிடமும் கேட்டுப் பார்த்தார். அவர்கள் அனைவருமே ஆசிரியை குமுதுவுடன் அவன் ஆட்டோவில் ஏறி சென்றதை தெரிவித்துள்ளனர்.

ஆசிரியை வீட்டில் சென்று பார்த்தபோது, டீச்சரின் இரண்டு பிள்ளைகள் மட்டும் இருந்தன. ஆசிலியை காணவில்லை. இதனால் போலீசார் மாணவனை கடத்தியது ஆசிரியை தான் என்பதை உறுதிசெய்தனர். இதைத்தொடர்ந்து ஆசிரியை குமுதுவின் உறவினர்கள் வீடுகளில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையில் ஆசிரியை குமுது வியாசர்பாடியில் ஒரு பள்ளியில் இதேபோன்று சம்பவத்தின் ஈடுபட்டது தெரிந்து அந்த மாணவன் பற்றிய விபரத்தை சேகரித்தனர். அந்த மாணவனையும் தேடிப் பிடித்தனர். 

அவன் அளித்த தகவல்கள் போலீசுக்கு மிகவும் உதவியாக இருந்தது. அந்த மாணவன் கூறிய விபரங்கள்: ஆசிரியை குமுது என்னிடம் மிகவும் பாசமாக இருப்பார். திடீரென்று ஒருநாள் என்னை ஊருக்கு போகலாம் என்று அழைத்தார். நானும் சென்றேன். இரண்டு ரெயிலும், ஒரு நாள் வேனிலும் சென்ற பிறகுதான், அந்த ஊரே வந்தது. மூன்று நாட்கள் அவருடன் ஊரில் இருந்தேன். பின்னர் சென்னைக்கு கொண்டுவந்துவிட்டுவிட்டார். என்னுடைய பெற்றோர் போய் ஆசிரியையிடம் சண்டை போட்டார்கள். அதனால் அவரை வேலையில் இருந்து எடுத்துவிட்டார்கள். என்னையும் வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள். இவ்வாறு அந்த மாணவன் கூறியிருந்தான்.

இதனால் ஆசிரியை குமுது ஜிஜெந்திரகுமாரை அழைத்துக்கொண்டு ராஜஸ்தானுக்குத்தான் சென்றிருப்பார் என்று போலீசார் முடிவு செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் போலீஸ் தனிப்படை ராஜஸ்தான் சென்றது. கடந்த 4 நாட்களாக அங்கு முகாமிட்டிருந்த போலீசார் பிடியில் ஆசிரியை குமுதுவும், மாணவன் ஜிஜெந்திரகுமாரும் சிக்கிக்கொண்டனர். 16.03.2012 காலை இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். யானைக்கவுளி போலீசார், இருவரிடமும் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மாணவன் சிறுவன் என்பதால், அவனை கெல்லீஸில் உள்ள அரசு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியை ஜார்ஜ் டவுன் மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 15வது கோர்ட் மாஜிஸ்திரேட் அலெக்ஸ்சாண்டர் ஆசிரியை குமுதுவை 15 நாள் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உடனடியாக ஆசிரியை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த கடத்தல், மீட்பு சம்பவம் சென்னையையே பதைபதைக்க வைத்துள்ளது

SHORT FLIM KISS $ LOVE


ரீமா சென் கல்யாணத்துல ஸ்ரேயா ஆடுன குத்தாட்டத்தின் ஒரு பகுதி
















The Boon - Short FIlm


தமிழில் ஏன் பேச வேண்டும்.

அப்பாவோட ...கைத்தடி அப்பா செத்து போனதுக்கு அப்புறம் தான் நாம பாது காத்து வைப்போம். இருக்கும் போது அதுக்கு மரியாதை கொடுத்து வைக்கமாட்டோம் அப்பாவோட புகைப்படமும் அப்டிதான் அந்த மாதரி ஆய்ட கூடாது தமிழ்! 

தமிழர் விரோதிகள்...


ஆசியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இனக்கொலையை வடிவமைக்கும் இந்தியா - நோர்வே அறிக்கை 18 11 2011 ஆசியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இனக்கொலையை வடிவமைக்கும் இந்தியா - நோர்வே அறிக்கை தோல்வியடைந்த இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வு அறிக்கையில் ஆசியாவின் வல்லரசுச் சக்திகள் ராணுவ ரீதியான தீர்வை உள்நாட்டுப் பிணக்குகளுக்கு முன்வைத்ததன் காரணமாகவே தமது சமாதான நடவடிக்கை இலங்கையில் தோல்வியடைந்ததாக நோர்வேக்குழு தெரிவித்திருக்கிறது.மேலும் இவ்வாறான போக்கு நோர்வே தலமையிலான பிற்காலத்தில் நடக்கவிருக்கும் எந்தவொரு சமாதான நடவடிக்கைகளையும் முற்றான தோல்விக்கு இட்டுச் செல்லும் என்று அது அஞ்சுவதாகக் கூறியிருக்கிறது. தமிழர் மீது நடாத்தி முடிக்கப்பட்ட இனக்கொலையின் சுத்திரதாரியாக இந்தியாவை நேரடியாக இந்த அறிக்கைச் சுட்டிக்காட்டவில்லையாயினும் கூட , இந்த அறிக்கையின் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதின்படி நோர்வேயில் நடந்த கலந்துரையாடலில் இனக்கொலையினை நடத்தி முடித்ததில் இந்தியாவே பிரதான தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளதை இந்த அறிக்கை நாசுக்காகக் கூறியிருக்கிறது. இனக்கொலையின் பின்னரான எழுச்சியடைந்துவரௌம் சிங்களத் தேசியவாதம் பற்றிக்கவலைப்படும் இந்த அறிக்கை, தமிழர்களை "உள்நாட்டுத் தீர்வொன்றிற்கே" செல்லும்படி அறிவுறுத்துகிறது.

சமமற்ற உலக ஒழுங்கில் சிங்களத் தேசியவாதம் சர்வதேசத்தின்மீது கொண்டுள்ள அதிகாரத்துடன் ஒப்பிடும்போது, இனக்கொலையின் பின்னரான தமிழ்த் தேசியம் என்பது சர்வதேசத்தின்மீது பலமான அழுத்தத்தை இதுவரை கொடுக்கவில்லை என்பதே உண்மையாகும். சிலவேளை புது தில்லியும், தமிழகத்துத் தலைவர்களும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் மீது அதிகரித்துவரும் அபிமானத்தை தகர்த்தெறிந்துவிடுவார்கள் என்று சர்வதேசம் எண்ணியிருக்கலாம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வெனும் தான் நடத்திவந்த சமாதான நடவடிக்கைகள் ஒன்றில் சர்வதேச தலையீட்டினாலோ அல்லது ராணுவ ஆதிக்கத்தினாலோ தோல்வியடைந்துள்ளதென்பதை இந்த அறிக்கை மறைமுகமாகவோ அல்லது அப்பாவித்தனமாகவோ ஒத்துக்கொள்கிறது. 

ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளானா தீர்வென்பதின் தோல்வியென்பது எமக்கு முன்னாலுள்ள மாற்றுத் தீர்வுகளை நன்றாகச் சுருக்கியிருக்கிறது. இனி வார்த்தை ஜாலங்களுக்கு இடமில்லை. ஒன்றில் தனியான நாடு அல்லது முற்றான ஈழத்தமிழரின் அழித்தொழிப்பு என்பவற்றில் ஒன்று நிச்சயம் இனிவரும் காலத்தில் நடக்கப்போகிறது.நோர்வே, இந்தியா சர்வதேச சமூகம் என்கிற மூன்று பேருக்கும் இந்த உண்மை தெரிந்திருந்தாலும் கூட, அவர்கள் மகிந்தவின் "உள்நாட்டுத் தீர்வென்பதை" வலியுறுத்துவதன் மூலம் மேலே சொல்லப்பட்ட இரண்டு தெரிவுகளில் ஒன்றான முற்றான ஈழத்தமிழரின் அழித்தொழிப்பிற்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றன. 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...