முன்பெல்லாம் எம்ஜிஆர் - சிவாஜி படங்கள் ரிலீஸாகும்போது தமிழகமே போர்க்கோலம் பூண்டிருக்கும். அப்படியொரு ஆர்வத்துடன் தியேட்டர்கள் முன் திரண்டு நிற்பார்கள் ரசிகர்கள்.பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் அப்படியொரு காட்சியை இன்று பார்க்க முடிந்தது.இன்று ஒரே நாளில் எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் படமும் சிவாஜியின் கர்ணன் படமும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளியாகின்றன.
எம்ஜிஆர் நடிப்பில் வெளியான குடியிருந்தகோயில், அவரது நடிப்பில் புதிய பரிமாணத்தைக் காட்டிய படம். இரட்டை வேடங்களில் ஜொலிப்பார் எம்ஜிஆர். இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடி ஜெயலலிதா. இருவரின் ஜோடிப் பொருத்தமும் அசத்தலாக இருக்கும். அன்றைய நாட்களில் வசூலில் புதிய சாதனைப் படைத்தது குடியிருந்த கோயில்.சிவாஜியின் கர்ணன் படம் பிரமாண்டமான அரங்க அமைப்பு, சிவாஜி நடிப்புக்காக பெரிதாகப் பேசப்பட்டாலும், அன்றைக்கு வசூலில் பெரிதாகப் போகவில்லை. இந்தப் படத்தால் வந்த நஷ்டத்தை, எம்ஜிஆரை வைத்து ஆயிரத்தில் ஒருவன் படம் எடுத்துதான் ஈடுகட்டினார் இயக்குநரும் தயாரிப்பாளருமான பிஆர் பந்துலு.சிவாஜியின் ரசிகர்கள் சிலர் ஒன்றிணைந்து கர்ணன் படத்தை டிஜிட்டலில் வெளியிட்டுள்ளனர்.இன்று படம் வெளியான அரங்குகளில் இரு தரப்பு ரசிகர்களும் வரிசையில் நின்று படத்துக்கு டிக்கெட் வாங்கிப் பார்த்தனர். குறிப்பாக உட்லண்ட்ஸ் திரையரங்கில் ஏகக் கூட்டம். கர்ணன் படத்துக்காவது கடந்த ஒரு மாதமாக விளம்பரம் செய்து வந்தார்கள்.
ஆனால் குடியிருந்த கோயிலுக்கோ எந்த விளம்பரமும் இல்லை. நான்கு நாட்களாகத்தான் ஏற்பாடு செய்தனர். ஆனால் உட்லண்ட்ஸ் அரங்கம் நிரம்பி வழிந்தது. எம்.ஜி.ஆரின் கட்அவுட் வைத்து பேனர், கொடி தோரணம் கட்டியிருந்தனர். பட்டாசு வெடி அமர்க்களப்பட்டது.ராயபுரம் இரா. ஆனந்தன், எல். கலைவாணன், எம்.பூபாலன், முரளி, வெங்கட் உள்ளிட்ட எம்.ஜி.ஆர். ரசிகர்கள் டிக்கெட் எடுக்க கியூவில் நின்றவர்களுக்கு இனிப்பு வழங்கினர். எம்ஜிஆர் எப்போதுமே கிங்குதான்!
உலகில் உள்ள 10 கோடி தமிழ் மக்கள் உள்ளங்களில் மறைந்து 25 ஆண்டுகள் ஆகியும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் நம் மக்கள் திலகம்..... முப்படை வைத்து போராடிய முதல் தமிழன் மாவீரன் பிரபாகரன் அவர்களை உருவாக்கி தமிழன் என்றால் யார் என்று உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தவர் நம் பொன்மனச்செம்மல்..... எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ரசிகர்கள் பகதர்கள் தொண்டர்கள் அபிமானிகள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல எங்கெங்கு தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கடல் கடந்து எல்லா நாட்டிலும் உண்டு. இப்படி ஒரு சிறப்பு இந்த உலகில் இதுவரைக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் இருந்தது இல்லை. எம்.ஜி.ஆர் ஒரு தனிப்பிறவி அல்லது தெய்வபிறவி சொல்ல தெரியவில்லை! தொல்காப்பியம் திருக்குறள் மாதிரி தமிழ் நெஞ்சங்களுக்கு எம்.ஜி.ஆர் ஒரு அறிய பொக்கிஷம்
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி!
ReplyDelete