சென்னை சவுகார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் தச்சராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ஜிஜெந்திரகுமார் (வயது 16). சவுகார்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தான். கடந்த பிப்ரவரி மாதம் வீட்டுக்குச் சென்ற மாணவன் செல்போனில் எதையோ ஆர்வமாக பார்ப்பதை அறிந்த அவன் தந்தை குமார் மகன் உறங்கிய பின்னர், அந்த செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.
அதில் ஏராளமான ஆபாச காட்சிகள் பதிவாகி இருந்திருக்கிறது. இதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்து மகனிடம் விளக்கம் கேட்டார். அவன் ஏதும் சொல்லவில்லை. இதையடுத்து மகனுடன் படிக்கும் மற்ற மாணவர்களிடம் விசாரித்துள்ளார். மாணவர்கள் ஜிஜெந்திரகுமாரிடம் மட்டும் அறிவியல் வகுப்பு ஆசிரியை குமுது என்கிற குமுதா அதிக பாசம் காட்டுவதை பலமுறை பார்த்திருப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் மகனுக்கு தெரியாமல் பள்ளிக்கு அருகே போய், பள்ளி விடும் நேரத்தில் நடப்பவைகளை கண்காணித்து வந்தார். அப்போது ஒரு நாள் மாணவன் ஜிஜெந்திரகுமாரை ஆசிரியை குமுது அன்பாக அரவணைத்துச் செல்வதை பார்த்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ஆசிரியை குமுதுவிடமே இதுபற்றி கேட்டு சண்டை போட்டார்.
ஜிஜெந்திரகுமார் என் மகன் மாதிரி என்று சொல்லி அப்போது ஆசிரியை குமுது எளிதில் தப்பித்துவிட்டார். இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பள்ளி நிர்வாகத்திடம் இதுபற்றி புகார் செய்தார். அவர்கள் ஆசிரியை குமுதுவை அழைத்து விசாரித்தனர். அவர்களிடமும் ஆசிரியை குமுது அதேபோலத்தான் பதிலை சொல்லியிருக்கிறார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த மாணவனின் தந்தை மகனை மட்டும் வீட்டில் கண்டிக்க தொடங்கினார். இந்த விவகாரங்கள் இரண்டு மூன்று நாட்கள் வரை சென்றுக்கொண்டிருந்தன. திடீரென பள்ளிக்கு சென்றிருந்த ஜிஜெந்திரகுமார் ஒரு நாள் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் தந்தை குமார், பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளார். நண்பர்களிடமும் கேட்டுப் பார்த்தார். அவர்கள் அனைவருமே ஆசிரியை குமுதுவுடன் அவன் ஆட்டோவில் ஏறி சென்றதை தெரிவித்துள்ளனர்.
ஆசிரியை வீட்டில் சென்று பார்த்தபோது, டீச்சரின் இரண்டு பிள்ளைகள் மட்டும் இருந்தன. ஆசிலியை காணவில்லை. இதனால் போலீசார் மாணவனை கடத்தியது ஆசிரியை தான் என்பதை உறுதிசெய்தனர். இதைத்தொடர்ந்து ஆசிரியை குமுதுவின் உறவினர்கள் வீடுகளில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையில் ஆசிரியை குமுது வியாசர்பாடியில் ஒரு பள்ளியில் இதேபோன்று சம்பவத்தின் ஈடுபட்டது தெரிந்து அந்த மாணவன் பற்றிய விபரத்தை சேகரித்தனர். அந்த மாணவனையும் தேடிப் பிடித்தனர்.
அவன் அளித்த தகவல்கள் போலீசுக்கு மிகவும் உதவியாக இருந்தது. அந்த மாணவன் கூறிய விபரங்கள்: ஆசிரியை குமுது என்னிடம் மிகவும் பாசமாக இருப்பார். திடீரென்று ஒருநாள் என்னை ஊருக்கு போகலாம் என்று அழைத்தார். நானும் சென்றேன். இரண்டு ரெயிலும், ஒரு நாள் வேனிலும் சென்ற பிறகுதான், அந்த ஊரே வந்தது. மூன்று நாட்கள் அவருடன் ஊரில் இருந்தேன். பின்னர் சென்னைக்கு கொண்டுவந்துவிட்டுவிட்டார். என்னுடைய பெற்றோர் போய் ஆசிரியையிடம் சண்டை போட்டார்கள். அதனால் அவரை வேலையில் இருந்து எடுத்துவிட்டார்கள். என்னையும் வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள். இவ்வாறு அந்த மாணவன் கூறியிருந்தான்.
இதனால் ஆசிரியை குமுது ஜிஜெந்திரகுமாரை அழைத்துக்கொண்டு ராஜஸ்தானுக்குத்தான் சென்றிருப்பார் என்று போலீசார் முடிவு செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் போலீஸ் தனிப்படை ராஜஸ்தான் சென்றது. கடந்த 4 நாட்களாக அங்கு முகாமிட்டிருந்த போலீசார் பிடியில் ஆசிரியை குமுதுவும், மாணவன் ஜிஜெந்திரகுமாரும் சிக்கிக்கொண்டனர். 16.03.2012 காலை இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். யானைக்கவுளி போலீசார், இருவரிடமும் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவன் சிறுவன் என்பதால், அவனை கெல்லீஸில் உள்ள அரசு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியை ஜார்ஜ் டவுன் மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். 15வது கோர்ட் மாஜிஸ்திரேட் அலெக்ஸ்சாண்டர் ஆசிரியை குமுதுவை 15 நாள் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உடனடியாக ஆசிரியை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த கடத்தல், மீட்பு சம்பவம் சென்னையையே பதைபதைக்க வைத்துள்ளது
No comments:
Post a Comment