தமிழ் திரைப்பட விழா 2012-க்கான குறும்பட போட்டிப் பிரிவுக்கு 20 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவுக்கென்றே உலக அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. வரும் ஏப்ரல் 25 முதல் 29 வரை நடக்கிறது. இந்த விழாவின் முடிவில் சிறந்த திரைப்படத்துக்கு தமிழர் விருதும், சிறந்த நடிகர் - நடிகை, தொழில் நுட்பக் கலைஞர்கள், சிறந்த இயக்குநருக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வு சிறந்த தமிழ் குறும்படங்களை சர்வதேச பார்வையாளர்களுக்கு திரையிடுவது.
குறும்படங்கள் தேர்வு குறித்து திரைப்பட விழாவின் இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் கூறுகையில், "இந்த ஆண்டு விழா பற்றிய அறிவிப்பு வெளியானதுமே ஏராளமான படைப்பாளிகள் தங்கள் படங்களை விழா குழுவினருக்கு அனுப்பிய வண்ணம் இருந்தனர். இறுதித் தேதிக்குப் பிறகும்கூட பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படங்களை அனுப்பலாமா... சேர்க்க முடியுமா என கேட்டவண்ணம் இருந்தது, இந்த விழாவின் பெருமையை பறைசாற்றுவதாக இருந்தது.ஆழந்த பரிசீலனைக்குப் பிறகு நார்வே தமிழ் திரைப்பட விழா நடுவர் குழு 20 குறும்படங்களை தேர்வு செய்ததது.
அவை:தி மெசையா (ஷரத் ஜோதி)
கல் (மஞ்சுநாதன் எஸ்)
ரோட்சைட் அம்பானிஸ் (கமல் சேது)
துருவ நட்சத்திரம் (அரவிந்த் சுப்ரமணியன்)
நானும் ஒரு பெண் (வி ராமநாதன்)
அண்ட் ஷி ப்ளைஸ் (முகில் சந்திரன்)
ஸ்கூல் சப்பாத்து (மகேஸ்வரன் பாலகிருஷ்ணன்)
நகல் (பொன் தயா)
பூச்சாண்டி (சைமன் ஜார்ஜ்)
காட்டு மூங்கில் (விகடகவி)
பராசக்தி (ஆர்த்தி மங்களா)
துவந்த யுத்தம் (எஸ் அசோக்குமார்)
கள்ளத்தோணி (அருள் எழிலன்)
மூன்றாம் தமிழ் (ரா பச்சமுத்து)
ஆக்ஷன் (புஷ்கின் ராஜா)
அவன் (ரூபஸ் ஜெ)
விடுமுறை வேண்டி (சதீஷ் குமார்)
உயிரோசை (பிரபு துரைராஜ்)
யார் (கணேஷ் பிரபு)
பாடசாலை (பி பாஸ்கர்)
தூங்கா நகரம் - சிறப்புத் திரையிடலுக்கு தேர்வு கவுரவ் இயக்கத்தில் விமல் - அஞ்சலி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுக்களைப் பெற்ற தூங்கா நகரம் திரைப்படம் இந்த ஆண்டு நார்வே தமிழ் திரைப்பட விழாவின் சிறப்புத் திரையிடலுக்கு தேர்வாகி உள்ளது. அன்னக்கிளி ஆர் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பச்சைக் குடை படமும் சிறப்புத் திரையிடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது," என்றார்.
நார்வே தமிழ் திரைப்பட விழா நிகழ்ச்சிகள்: இந்த ஆண்டு திரைப்பட விழாவில் சிறப்பு இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து பிரபல பின்னணி பாடகி சாருலதா மணி, ஸ்ரீமதுமிதா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடுகிறார். கனடா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர்களும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.இவர்களைத் தவிர, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த 5 நாள் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment