ஆசியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இனக்கொலையை வடிவமைக்கும் இந்தியா - நோர்வே அறிக்கை 18 11 2011 ஆசியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இனக்கொலையை வடிவமைக்கும் இந்தியா - நோர்வே அறிக்கை தோல்வியடைந்த இலங்கையின் சமாதான நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வு அறிக்கையில் ஆசியாவின் வல்லரசுச் சக்திகள் ராணுவ ரீதியான தீர்வை உள்நாட்டுப் பிணக்குகளுக்கு முன்வைத்ததன் காரணமாகவே தமது சமாதான நடவடிக்கை இலங்கையில் தோல்வியடைந்ததாக நோர்வேக்குழு தெரிவித்திருக்கிறது.மேலும் இவ்வாறான போக்கு நோர்வே தலமையிலான பிற்காலத்தில் நடக்கவிருக்கும் எந்தவொரு சமாதான நடவடிக்கைகளையும் முற்றான தோல்விக்கு இட்டுச் செல்லும் என்று அது அஞ்சுவதாகக் கூறியிருக்கிறது. தமிழர் மீது நடாத்தி முடிக்கப்பட்ட இனக்கொலையின் சுத்திரதாரியாக இந்தியாவை நேரடியாக இந்த அறிக்கைச் சுட்டிக்காட்டவில்லையாயினும் கூட , இந்த அறிக்கையின் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதின்படி நோர்வேயில் நடந்த கலந்துரையாடலில் இனக்கொலையினை நடத்தி முடித்ததில் இந்தியாவே பிரதான தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளதை இந்த அறிக்கை நாசுக்காகக் கூறியிருக்கிறது. இனக்கொலையின் பின்னரான எழுச்சியடைந்துவரௌம் சிங்களத் தேசியவாதம் பற்றிக்கவலைப்படும் இந்த அறிக்கை, தமிழர்களை "உள்நாட்டுத் தீர்வொன்றிற்கே" செல்லும்படி அறிவுறுத்துகிறது.
சமமற்ற உலக ஒழுங்கில் சிங்களத் தேசியவாதம் சர்வதேசத்தின்மீது கொண்டுள்ள அதிகாரத்துடன் ஒப்பிடும்போது, இனக்கொலையின் பின்னரான தமிழ்த் தேசியம் என்பது சர்வதேசத்தின்மீது பலமான அழுத்தத்தை இதுவரை கொடுக்கவில்லை என்பதே உண்மையாகும். சிலவேளை புது தில்லியும், தமிழகத்துத் தலைவர்களும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் மீது அதிகரித்துவரும் அபிமானத்தை தகர்த்தெறிந்துவிடுவார்கள் என்று சர்வதேசம் எண்ணியிருக்கலாம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வெனும் தான் நடத்திவந்த சமாதான நடவடிக்கைகள் ஒன்றில் சர்வதேச தலையீட்டினாலோ அல்லது ராணுவ ஆதிக்கத்தினாலோ தோல்வியடைந்துள்ளதென்பதை இந்த அறிக்கை மறைமுகமாகவோ அல்லது அப்பாவித்தனமாகவோ ஒத்துக்கொள்கிறது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளானா தீர்வென்பதின் தோல்வியென்பது எமக்கு முன்னாலுள்ள மாற்றுத் தீர்வுகளை நன்றாகச் சுருக்கியிருக்கிறது. இனி வார்த்தை ஜாலங்களுக்கு இடமில்லை. ஒன்றில் தனியான நாடு அல்லது முற்றான ஈழத்தமிழரின் அழித்தொழிப்பு என்பவற்றில் ஒன்று நிச்சயம் இனிவரும் காலத்தில் நடக்கப்போகிறது.நோர்வே, இந்தியா சர்வதேச சமூகம் என்கிற மூன்று பேருக்கும் இந்த உண்மை தெரிந்திருந்தாலும் கூட, அவர்கள் மகிந்தவின் "உள்நாட்டுத் தீர்வென்பதை" வலியுறுத்துவதன் மூலம் மேலே சொல்லப்பட்ட இரண்டு தெரிவுகளில் ஒன்றான முற்றான ஈழத்தமிழரின் அழித்தொழிப்பிற்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றன.
No comments:
Post a Comment