உலக அளவில் கார்களின் எண்ணிக்கையும், கார் வாங்குவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் கார்களுக்கான இன்சூரன்ஸ் மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. ஒவ்வொரு கார் உரிமையாளரும் தனது காருக்கான இன்சூரன்சை கண்டிப்பாக செலுத்த வேண்டும் என்பதால் ஒவ்வொரு நாளும் ஏராளமான இன்சூரன்ஸ் பாலிசிகள் விற்றுத் தீர்ந்து கொண்டிருக்கின்றன.ஆனாலும் இன்சூரன்ஸ் செலுத்தும் கார் உரிமையாளர்கள் தங்களது இன்சூரன்ஸ் பணத்தைத் திரும்பப் பெறுவதில் ஏராளமான சிக்கல்களையும், பிரச்சினைகளையும் சந்திப்பதாக குறைபட்டுக் கொள்கின்றனர். மேலும் தங்களது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சரியான நேரத்தில் இன்சூரன்ஸ் பணத்தைத் திருப்பித் தருவதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர். அதனால் அவர்கள் தங்களது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அடிக்கடி மாற்றும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். கார் உரிமையாளர்கள் தங்களது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அடிக்கடி மாற்றுகின்றனர் என்பதைப் பார்ப்போம்.
1. நிலையில்லாத கட்டணம்:
ஏராளமான வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை அள்ளிவிடுகின்றனர். ஆனால் அவர்கள் அறிவித்த திட்டங்களைவிட சீரான இடைவெளியில் அதிகமான பணத்தைச் செலுத்த வேண்டி இருப்பதாக பாலிசிதாரர்கள் கூறுகின்றனர். அதனால் பல பாலிசிதாரர்கள் தங்களது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அடிக்கடி மாற்றிவிடுகின்றனர். எனவே, ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுப்பதற்கு முன்பு பல நிறுவனங்களின் பாலிசிகளை ஒப்பிட்டு, பிடித்த நிறுவனத்தில் பாலிசி எடுப்பது சிறந்ததாக இருக்கும்.
2. முழுமையாக தேவைகளை நிறைவு செய்யாத பாலிசி:
பாலிசிதாரர்கள் தங்களது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அடிக்கடி மாற்ற முக்கிய காரணம் பாலிசிதாரர்களின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யாத பாலிசி ஆகும். அவ்வாறு பாலிசிதாரரின் தேவைகளை அந்நிறுவனம் முழுமையாக நிறைவு செய்யாத போது அவர் வேறொரு நிறுவனத்தை நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறரார்.
3. இன்சூரன்ஸ் பணத்தைத் திருப்பத் தருவதில் கால தாமதம்:
ஒருசில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிதாரரின் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் கால தாமதம் செய்கின்றன. அதுபோல் நீண்ட ஒழுங்கு முறைகளையும் வைத்திருக்கின்றன. அதனால் பாலிசிதாரர்கள் கோபமும், விரக்தியும் அடைந்து புதிய நிறுவனங்களை நாடுகின்றனர்.
4. திருப்தி இல்லாத வாடிக்கையாளர் சேவை:
ஒரு சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களான பாலிசிதாரர்களுக்கு முறையான மற்றும் நிறைவான சேவைகளை வழங்குவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. வாடிக்கையாளரிடம் தமது பாலிசிகளை விற்றவுடன் அவர்களை முழுமையாக மறந்துவிடுகின்றன. அதுபோல் பாலிசிதாரர்கள் தமது இன்சூரன்ஸ் பணத்தைத் திரும்ப பெறுவதற்காக நிறுவனத்தை நாடும் போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவும் மறுத்துவிடுகின்றனர். அதனால் பல பாலிசிதாரர்கள் தங்களது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இன்சூரன்ஸ் நிறுவனங்களை திறனாய்வு செய்வது எப்போது:
பாலிசிதாரர்கள் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் தங்களின் இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பற்றி ஆய்வு செய்வது நல்லது. அதன் மூலம் பாலிசியை மாற்ற வேண்டுமா அல்லது நிறுவனத்தை மாற்ற வேண்டுமா அல்லது சந்தையில் வேறு சிறந்த பாலிசி உள்ளதா என்பதை அறிய முடியும். எடுத்துக்காட்டாக காரின் உதிரிப் பாகங்களுக்கான ஒரு நிலையான இன்சூரன்ஸ் பாலிசியை ஒரு பாலிசிதாரர் விரும்பலாம். ஆனால் தற்போது அவர் வைத்திருக்கும் பாலிசி அதற்கான வசதியை வழங்காது. அந்த நிலையில் அவர் தனது தேவையை நிறைவு செய்யும் புது பாலிசியை வாங்கலாம்.
அதுபோல் காரின் இன்சூரன்ஸ் பாலிசியைப் பற்றி அவ்வப்போது பாலிசிதாரர் திறனாய்வு செய்வது நல்லது. அதன் மூலம் அவர் வேறொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுக்க வேண்டுமா என்பதை அறிந்து அதற்கேற்ப முடிவு எடுக்க முடியும். ஆனால் முடிவு எடுப்பதில் அவசரம் கூடாது. புதிய நிறுவனத்தில் பாலிசி எடுப்பதற்கு முன்பு ஏற்கனவே உள்ள நிறுவனத்தோடு கலந்து பேசி தற்போது உள்ள பாலிசியில் தேவைக்கேற்ப மாற்றம் செய்ய முடியுமா என்பதை அறிய வேண்டும். அவ்வாறு முடியாத பட்சத்தில் வேறு நிறுவனத்தில் பாலிசி எடுக்கலாம். நிறைய பாலிசிதாரர்கள் அடிக்கடி தெளிவு இல்லாமல் இன்சூரன்ஸ் நிறுவனங்களை மாற்றிக் கொண்டு இருக்கின்றனர். அது சிறப்பாக அமையாது. அவ்வாறு மாற்றும்போது தீர்க்கமாக ஆராய்ந்து முடியு எடுக்க வேண்டும்.