|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 January, 2013

சுபத்துடன் துவங்குவோம்...

சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளே மகரசங்கராந்தி. இந்நாளை தமிழகத்தில் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். தேவலோக காலக்கணக்குப்படி, நம்முடைய ஓராண்டு என்பது, அவர்களுக்கு ஒருநாள். இதில், தைமுதல் ஆனி வரையுள்ள ஆறுமாதங்கள் பகல்பொழுது. இதனை உத்ராயணம் என்று குறிப்பிடுவர். இந்த காலத்தில் சூரியன் வடதிசை நோக்கிச் சஞ்சரிக்கும். ஆடிமுதல்மார்கழி வரை இரவுப்பொழுது. அப்போது சூரியன் தெற்குநோக்கி சஞ்சரிக்கும்.உத்ராயண காலத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவது சிறப்பு.

சூரிய மந்திரம்
நம: ஸவித்ரே ஜகதேச சக்ஷúஷே
ஜகத் ப்ரஸூதி ஸ்திதி நாச ஹேதவே
த்ரயீமயாய த்ரிகுணாத்ம தாரிணே
விரிஞ்ச நாராயண சங்கராத்மனே
ஜபாகு ஸும ஸங்காசம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்
த்வாந்தாரிம் ஸர்வ பாபக்னம்
ப்ரணதோஸ்மி திவாகரம்
என்ற சூரிய மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

பொருள்: உலகிற்குக் கண்ணாக இருப்பவனே! முத்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்பவனே! வேத வடிவமே! முக்குணங்களைப் பெற்றவனே! பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியாகவும் திகழும் சூரியனே! உமக்கு நமஸ்காரம். காஷ்யப முனிவரின் மகனே! செம்பருத்திப்பூவின் நிறத்தைக் கொண்டவனே! இருளின் எதிரியே! பேரொளி உடையவனே! பாவங்களைப் போக்குபவனே! திவாகரனே! உம்மைப் போற்றுகிறேன்.இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும். சூரியவழிபாட்டுக்கு உகந்த நாள் ஞாயிறு. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்கள் சிறந்தவை. திதிகளில் வளர்பிறை சப்தமி ஏற்றது. இந்த நாட்களில் காலையில் நீராடிய
பிறகு, கிழக்கு நோக்கி நின்று சூரியனை வணங்க வேண்டும். 

தைமாதம் சுக்லபட்சம் திரிதியை திதி, அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம், கும்பலக்னம், கும்பராசி, செவ்வாய் ஓரையில் காலை 9.28க்கு பிறக்கிறது. அன்று திங்கள்கிழமை. அந்நாளில் சூரியன் மகரராசியில் நுழைகிறார். இதை "மகர சங்கராந்தி' என்பர். "சங்கராந்தி' என்றால் "நுழைதல்'. ஒவ்வொரு ஆண்டும் வரும் மகரசங்கராந்திக்கு, ஒரு தேவதையை ஜோதிட சாஸ்திரத்தில் நியமித்துள்ளனர். இந்த தேவதையை "புருஷர்' என்பர். இவ்வாண்டுக்குரிய புருஷரின் பெயர் தூவங்கிஸி. இவர் பூமியை நோக்கி கிழக்கே அமர்கிறார். இதனால், நாடெங்கும் நல்ல மழை பொழியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழமையான கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...