|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 January, 2013

தொடரும் அவமானம்,,,?

* ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் (0-4), முத்தரப்பு தொடரில் தோல்வி
* ஆஸ்திரேலியாவுடன் "டுவென்டி-20' தொடர் "டிரா' (1-1).
* ஆசிய கோப்பையில் ஏமாற்றம்
* "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் "அவுட்'
* சொந்த மண்ணில் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரை இழந்தது (1-2).
* "டுவென்டி-20' தொடரில் இங்கிலாந்துடன் சமன் (1-1).
* பாகிஸ்தானுடன் "டுவென்டி-20' தொடர் "டிரா' (1-1).
* பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் தோல்வி (0-2)
* தவிர, கோல்கட்டா மண்ணில் பங்கேற்ற 6 போட்டிகளில், 5ல்   பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
 
"விளையாடு அல்லது வெளியேறு'
இந்திய அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க, பி.சி.சி.ஐ., அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பழம்பெருமைகளை பேசிக் கொண்டு, அணியில் ஒட்டிக் கொண்டிருக்கும் "விளையாடாத' சீனியர் வீரர்களை நீக்கி விட்டு, ரகானே, ராயுடு போன்ற இளம் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஓயாத போட்டிகளும் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். இதனை தவிர்க்கும் பொருட்டு டெஸ்ட், ஒருநாள் போட்டி, "டுவென்டி-20' என ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி அணியை உருவாக்கலாம். கேப்டன் தோனி மட்டும் தனிநபராக நின்று அனைத்து போட்டிகளிலும் வெற்றி தேடித் தர இயலாது. பகையை மறந்து அனைத்து வீரர்களும் நாட்டுக்காக ஒற்றுமையுடன் விளையாடினால் தான், அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலாவது சாதிக்க முடியும்.
 

ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பாரோ?

லவ்’ என்றால் காதல் என்று தானே பொருள். ஆனால் இந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரோ ‘லவ்’ என்றால் பணம், நேரம், மனம், வாழ்க்கை எல்லாம் பாழ் என்ற அர்த்தத்தில் எழுதி வைத்துள்ளார். ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பாரோ?

ஆபரேஷன் ஆம்லா!

"ஆபரேஷன் ஆம்லா" என்று கடல் வழியாக ஊடுருவும் தீவரவாதிகளை தடுக்கும் ஒத்திகை - சென்னை

கரெக்டா அமலா பால் வீட்டு வாசல்ல போய் நிப்பாய்ங்க பாரேன்..

பார்த்ததில் பிடித்தது!

எனக்குப் பின் ஸ்டாலின்: கருணாநிதி
உனக்கு முன் நான்: அழகிரி
உங்களுக்கு லெஃப்டுல நான்: தயாநிதி
உங்களுக்கு ரைட்டுல நான்: கனிமொழி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...