வாழைப்பழத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என ஆஸ்திரேலியாவில் உள்ள
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. அந்நாட்டில் உள்ள வாழைப்பழ
உற்பத்தியாளர் சங்கத்தினர் எங்களிடம் ஆண்டுதோறும் 20 ஆயிரம் டன் வாழைப்பழங்கள் அழுகி
குப்பைத்தொட்டியில் வீசப்படுகின்றன என்று கூறினர். உடனே ஆராய்ச்சியில் இறங்கிய
பல்கலைக்கழகம், அழுகிய வாழைப்பழங்களை ஒரு பெரிய தொட்டியில் போட்டு, அது மேலும்
அழுகுவதற்கான வேதிப்பொருள்களைக் கலந்தனர். நன்றாக அழுகியதும் அதிலிருந்து மீதேன்
வாயு வெளியானது. அந்த வாயுவின் மூலம் ஜெனரேட்டரை இயங்க வைத்து, அதன் மூலம் மின்சாரம்
தயாரித்து மின்சாதனப் பொருள்களை இயங்க வைத்தனர். இது குறித்து ஆய்வுகள் விரிவடையும்
போது அதிக அளவு மின்சாரத்தை தயாரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment