பிரேசில் நாட்டின் சாவோ பாலோ
நகரில் இன்று நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில், அங்கோலா நாட்டு அழகி
லீயலா லோபஸ் 2011ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட லீயலா லோபஸூக்கு கடந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியான மெக்சிகோ நாட்டின் ஸிமீனா நவரெட்டி கிரீடம் சூட்டினார். உக்ரைன் நாட்டு அழகி ஒலிசியா ஸ்டீபான்கோ இரண்டாவது சிறந்த அழகியாகத் தேர்வானார். பிரேசில் நாட்டின் பிரிசிலா மச்சாடோ மூன்றாவது சிறந்த அழகியாகத் தேர்வானார்.
“என்னை இவ்வளவு அழகாக படைத்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். அவனுடைய படைப்பை ஒருபோதும் நான் மாற்ற மாட்டேன். உள் அழகோடு படைக்கப்பட்ட பெண்ணாக என்னை நான் கருதுகிறேன். எனது குடும்பத்தினரிடமிருந்து பல நல்ல கோட்பாடுகளை நான் கற்றுள்ளேன், அதனை என் வாழ்வி்ல் கடைபிடிப்பேன்” என்று பிரபஞ்ச அழகியாகத் தேர்வான பிறகு அளித்த நேர்காணலில் லீயலா லோபஸ் கூறியுள்ளார். இந்த ஆண்டுப் போட்டியில் 89 நாடுகளின் அழகிகள் பங்கேற்றனர். பல வாரங்களாக பிரேசில் நாட்டில் இருந்த இவர்கள் அந்நாட்டின் பண்பாட்டு நடனமான சம்பாவை கற்றனர்.

No comments:
Post a Comment