ஜப்பானில் பாராளுமன்ற கீழ்சபைக்கு வரும் ஞாயிறன்று தேர்தல்
நடைபெறவுள்ளது. கடைசி நாளான இன்று அங்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹான்யூ தேர்தல் அலுவலகத்திற்கு கடைசி மூன்று
மணி நேரம் இருந்த நிலையில் ஒரு முதியவர் அங்கு வந்தார். அவர் தனது பெயரை
வேட்பாளர் பட்டியலில் சேர்க்க கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.சுறுசுறுப்பாக
காணப்பட்ட ரியோகிச்சி-கவாசிமா என்ற அந்த முதியவரின் வயது 94 ஆகும். இதனால்
அந்த கவுண்டரில் இருந்த பெண் அதிகாரி முதலில் உறைந்து போனார். தயங்கிய
அவர், பின்னர் உண்மையாக சொல்கிறீர்களா? என்று கேட்டுள்ளார்.
அவர்
தனது இறுதிக்காரியத்திற்கு சேர்த்து வைத்திருந்த 30 லட்சம் யென் பணத்தை
அங்கு எடுத்து வந்துள்ளார். 94 வயதான ரியோகிச்சி-கவாசிமாவே இந்த தேர்தலின்
வயது முதிர்ந்த வேட்பாளர் என்று பின்னர் அறியப்பட்டுள்ளார்.டோக்கிய
பெருநகர் விரிவாக்கத்தால் நெல்வயல் நிலங்கள் பாலாக்கப்படுவதாக கூறி ஆளும்
கட்சி மற்றும் எதிர்கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக அங்கு அவர்
நிற்கிறார். இத்தேர்தலில் சுதந்திர ஜனநாயகக் கட்சியான எதிர்கட்சியே
வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜப்பான்
சீனாவுக்கு இடையே 7 வருடம் நடந்த போரின் போது அவர் சீனர்களால் சிறை
பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர். எனவே சீனர்கள் நல்லவர் என்றும்
அவர் கூறிவருகிறார்.
No comments:
Post a Comment