|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 December, 2011

எலைட் ஒயின் ஷாப்' - டிசம்பர் 3-ம் வாரம் ஆரம்பம்!

வெளிநாட்டு மதுபானங்களை விற்பதற்காக 'எலைட்' ஒயின் ஷாப்கள் என்ற பெயரில் புதிய கடைகள் தயாராகி வருகின்றன. டிசம்பர் 3-வது வாரத்தில் இந்தக் கடைகள் தொடங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் 6,596 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் ரூ 17000 கோடி வரை வருமானம் வருகிறது. இதனை ரூ 20000 கோடியாக்க தமிழக அரசு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக 20 கடைகளைத் திறக்கிறது. இவைகள் ஒருபுறமிருக்க, வெளிநாட்டு மதுவகைகளை விற்பதற்காக, டாஸ்மாக் எலைட் ஷாப் என்ற பெயரில் புதிய மதுபான கடைகள் திறக்கப்படவுள்ளன.

இவற்றில், விலை உயர்ந்த விஸ்கி, ஒயின், பீர் வகைகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எலைட் ஒயின் ஷாப் எங்கு, எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதல் கட்டமாக 8 எலைட் ஷாப் திறக்கப்படுகின்றன. சென்னையில் கோடம்பாக்கம், வேளச்சேரி, பாடி (பிரிட்டானியா அருகே) ஆகிய 3 இடங்களில் முதல்கட்டமாக எலைட் ஷாப்கள் திறக்கப்படுகின்றன.

60 வகை மதுபானங்கள் சென்னைக்கு வெளியே மற்ற நகரங்களில் படிப்படியாக தொடங்கப்படும். டாஸ்மாக் எலைட் ஷாப்களில், ஜேக் டேனியல் விஸ்கி, ஜே.என்.பி.ரேர் விஸ்கி உள்பட 60 வகை விலை உயர்ந்த மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன. இதுதவிர பிரபலமான கரோனா, ஸ்ட்ரோஸ் உள்ளிட்ட 60 வகை பீர்களும் விற்கப்படவுள்ளன. டாஸ்மாக்கில் கிடைக்காத டின் பீர்களும் இந்த எலைட் ஷாப்களில் கிடைக்கும். எலைட் ஷாப் மதுபான கடைகளில் விஸ்கி, பிராந்தி போன்றவற்றின் குறைந்தபட்ச விலை ஆயிரம் ரூபாயாகும். அதிகபட்ச விலை 3 ஆயிரத்து 500 ரூபாய். பீர் வகைகள் நூறு ரூபாயில் ஆரம்பித்து 185 ரூபாய் வரை விற்கப்படும்.  எலைட் ஷாப்களை அமைக்கும் பணி வேக வேகமாக நடந்து வருகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...