சென்னையில் நேற்று நடந்த நிருபர்கள் சந்திப்பில், ராமதாஸ் கூறியதாவது:
மக்களுக்கு இலவசங்கள் வழங்க, தி.மு.க., ஆட்சியில் ஐந்தாண்டுகளில் 70 ஆயிரம்
கோடி ரூபாய் செலவிட்டனர். இந்த அ.தி.மு.க., ஆட்சியில், இலவசங்களுக்கு
இவ்வாண்டு மட்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட உள்ளதாகக் கூறுகின்றனர்.
இலவசங்களைக் கொடுத்தே மக்களை மழுங்கடிக்கப் பார்க்கின்றனர். மது விற்பனை
மூலம் 2002 - 2003ம் ஆண்டில், 2,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.
2011ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம், 17 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்
கிடைத்துள்ளது. இது குடிமக்களின் உயர்வைவிட "குடி'மகன்களின் வளர்ச்சியைத்
தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்தில், திராவிடக் கட்சிகள்
மாறி மாறி ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்ததற்கு, பா.ம.க., மன்னிப்பு
கேட்டுக் கொள்கிறது. மக்கள் எங்களுக்கு பாவ மன்னிப்பு வழங்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, என் தலைமையில் டாஸ்மாக் கடை மூடும் போராட்டம் நடத்த உள்ளோம். என் மகன் அன்புமணிக்கு தகுதியும், திறமையும் இருந்ததால் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தகுதியில்லாமலே சிலரது வாரிசுகள் அரசியல் நடத்துகின்றனர். அன்னா ஹசாரேயை யாரென்று எனக்குத் தெரியாது. அவர் போராட்டம் நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

No comments:
Post a Comment