அன்னா ஹஸாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஒரு வார காலம் உண்ணாவிரதம்
இருக்கலாம். 25,000 பேர் வரை அங்கு கூட அனுமதிக்கிறோம். தேவைப்பட்டால்
உண்ணாவிரதத்தை நீட்டிக்க அனுமதிக்கிறோம் என்று கூறிய டெல்லி காவல்துறையின்
நிபந்தனையை ஏற்க அன்னா ஹஸாரே மறுத்து விட்டார். இதனால் அவர் இன்றைக்குள்
திஹார் சிறையிலிருந்து வெளி வரும் வாய்ப்புகள் மங்கியுள்ளன. இழுபறி
நீடிக்கிறது.
காவல்துறையின் எந்த நிபந்தனைகளையும் ஏற்க முடியாது என ஹஸாரே கூறிவிட்டார். மேலும் தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை திஹார் சிறையை விட்டு வெளியே வர மறுத்து விட்டார். நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு பெருகி வருவதை அடுத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தது. பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது.
ஆனால் அன்னாவின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க அரசு தயாராக இல்லை. அரசின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க அன்னா தயாராக இல்லை. இந்நிலையில் அன்னா 1 மாத காலம் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் அரசோ 7 நாட்கள் அனுமதி அளித்துள்ளது. அன்னா டெல்லி ராம்லீலா மைதானத்தில் 1 வார காலம் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதுவும் அரசு விரும்பினால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளறது.
ஆனால், அரசின் நிபந்தனைகளை ஏற்க அன்னா மறுத்துவிட்டார். எந்தவித நிபந்தனைகளும் இன்றி அவர் விரும்பும் இடத்தில், விரும்பும் காலம் வரை உண்ணாவிரதம் இருக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளார். ஊழலை எதிர்த்து பாபா ராம்தேவ் தனது ஆதரவாளர்களுடன் இதே ராம்லீலா மைதானத்தில் தான் உண்ணாவிரதம் இருக்க வந்தார். ஆனால் அவர்களை உண்ணாவிரதம் இருக்க விடாமல் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னா ஹஸாரே விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அரசு மேலும் இறங்கி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராம்லீலா மைதானத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் அளவுக்கு அதிகமாக வாகனங்கள் நிறுத்தக் கூடாது. ஒலி பெருக்கிகளை எந்த நேரத்தில் எந்த அளவில் வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி தான் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. ஆனால் அவற்றை அன்னா சட்டையே செய்யவில்லை.
இன்றைக்குள் வர மாட்டார் அன்னா-கிரண் பேடி: இதற்கிடையே இன்று திஹார் சிறை முன்பு கூடியிருந்த அன்னா ஆதரவாளர்களிடையே கிரண் பேடி பேசுகையில், அன்னா இன்றைக்குள் சிறையிலிருந்து வர வாய்ப்பில்லை. எனவே இங்கு யாரும் கூடியிருக்க வேண்டாம். மாறாக இந்தியா கேட்டுக்குச் செல்லுங்கள். இது அன்னாவின் வேண்டுகோள் என்றார்.
இந்தியா கேட்டில் மக்கள் கூட்டம்: அன்னாவின் கோரிக்கையைத் தொடர்ந்து இன்று மாலை முதல் இந்தியா கேட் பகுதியில் மக்கள் பெருமளவில் கூடத் தொடங்கினர். அங்கு ஊழலுக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும், அன்னாவை வாழ்த்தியும் கோஷமிட்டிபடி மக்கள் குழுமியிருந்தனர்.

No comments:
Post a Comment