|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

02 November, 2011

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிருக்குரிய தண்டனை !


கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், முகமது ஆசிப், முகமது ஆமிருக்குரிய தண்டனை விவரம் இன்று வெளியாகிறது. தீர்ப்புக்குப் பின் இவர்கள் ஜெயிலில் அடைக்கப்படுவர் என்று தெரிகிறது.கடந்த ஆண்டு நடந்த லார்ட்ஸ் டெஸ்டில், பாகிஸ்தான் அணியின் அப்போதைய கேப்டன் சல்மான் பட், 27, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆசிப், 28, முகமது ஆமிர் 19, ஆகியோர் "ஸ்பாட் பிக்சிங்கில்' ஈடுபட்டு பிடிபட்டனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சல்மான் பட் (10 ஆண்டு), முகமது ஆசிப் (7 ஆண்டு), முகமது ஆமிர் (5 ஆண்டு) ஆகியோருக்கு, போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. 


குற்றம் நிரூபணம்: இந்த மூன்று வீரர்கள் மீதும் சதிசெய்து ஏமாற்றுதல், லஞ்சப்பணம் பெறுதல் போன்ற பிரிவுகளில், லண்டனில் உள்ள "சவுத்வொர்க் கிரவுன்' கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது. குற்றத்தை ஒத்துக் கொண்ட முகமது ஆமிரிடம் விசாரணை நடக்கவில்லை. 


இன்று ஜெயில்:  மற்ற இருவரும் குற்றவாளிகள் என, விசாரணைக் குழு தீர்ப்பு வழங்கியது. இதில் முகமது ஆசிப் மீதான, லஞ்சப் பணம் பெறுதல் குற்றச்சாட்டு மட்டும் இன்னும் <உறுதி செய்யப்படவில்லை. இவர்களுக்குரிய தண்டனை என்ற விவரம் இன்று வெளியாகிறது.  இதில் இரு பிரிவுகள் குற்றம் நிரூபிக்கப்பட்ட சல்மான் பட்டிற்கு ஏழு ஆண்டு, முகமது ஆசிப்பிற்கு இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும். குற்றத்தை முன்னதாகவே ஒத்துக்கொண்ட முகமது ஆமிருக்கு குறைந்த அளவிலான தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.


பத்திரிகைக்கு பாராட்டு:  இதுகுறித்து லண்டன் புலனாய்வு தலைமை சூப்பிரடென்டெண்ட் மாட் ஹார்ன் கூறுகையில்,"" இதுபோன்ற தீர்ப்புகளால், வீரர்கள் <<உண்மையான உணர்வுடன் போராடுவார்கள். இந்த சூதாட்டத்தை வெளியே கொண்டு வர உதவிய "தி நியூஸ் ஆப் தி வேர்ல்டு' பத்திரிகையின் செயல் பாராட்டத்தக்கது,'' என்றார்.


மகிழ்ச்சியாக உள்ளது: ஸ்பெஷல் கிரைம், பயங்கரவாதி பிரிவு சீனியர் வக்கீல் சல்லி வால்ஷ் கூறியது: மக்கள் பணம் கொடுத்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை, பொழுதுபோக்கு மற்றும் தொழிலாக வைத்துள்ளனர். தாங்கள் பார்ப்பது உண்மையான போட்டியா, இல்லையா என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. ஆனால், பாகிஸ்தானின் மூன்று வீரர்களும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். இதனால் தான் இந்த வழக்கு, சூதாட்டம் என்று மட்டும் எடுத்துக் கொள்ளாமல், "கிரைம்' பிரிவில் நடத்தப்பட்டது. தவறு நடந்ததை ஆதாரத்துடன் <உறுதி செய்து தீர்ப்பு தந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு சல்லி வால்ஷ் கூறினார்.


ஐ.சி.சி., வரவேற்பு: தீர்ப்பு குறித்து ஐ.சி.சி., தலைமை அதிகாரி ஹாருண் லார்கட் கூறுகையில்,"" பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டின் விதிகளை மட்டும் மீறவில்லை. அவர்கள் இங்கிலாந்தின் சட்டத்துக்கு புறம்பாகவும் நடந்துள்ளனர். இந்த தீர்ப்பு கிரிக்கெட்டில் ஊழல் செய்ய நினைக்கும் மற்ற வீரர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது,'' என்றார்.


கம்ரானிடம் விசாரணை:இந்த வழக்கின் போது போலீஸ் தரப்பில் வாதாடிய வக்கீல் அப்தாப் ஜாபர்ஜீ கூறுகையில்,"" சூதாட்ட சர்ச்சையில் கம்ரான் அக்மல், வகாப் ரியாஸ் ஆகியோரது நடவடிக்கைகள் ஆழமாக, மிக ஆழமாக சந்தேகத்தை ஏற்படுத்தியது,'' என்றார். இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,"" கம்ரான் அக்மல், வகாப் ரியாஸ் இருவரும் சூதாட்ட ஏஜன்ட் மசார் மஜீத்துடன் இணைத்து பேசப்பட்டனர். இதனால், இவர்கள் மீதான புகார் குறித்து புதிய விசாரணை நடத்த ஐ.சி.சி., முடிவு செய்துள்ளது,'' என, தெரிவித்துள்ளது.

---

மோடிக்கு கொலை மிரட்டல்: சூதாட்டம் குறித்து ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடி கூறுகையில்,"" ஐ.பி.எல்., போட்டிகளின் போது, "மேட்ச் பிக்சிங்' செய்யுமாறு, நிழல் உலக தாதாக்கள் என்னை மிரட்டினர். இதை ஏற்காததால் மூன்று முறை கொல்ல பார்த்தனர். ஏனெனில் சூதாட்ட புக்கிகளும், தாதாக்களும் என்னை கொல்ல விரும்பினர். இதுகுறித்த விவரங்களை மத்திய ஏஜன்சிகளிடம் தெரிவித்துள்ளேன். மும்பை போலீசிற்கும் இது தெரியும். இதுகுறித்து மேலும் எதுவும் பேசவிரும்பவில்லை. ஏனெனில், சிக்கலான இந்த பிரச்னை, எனது பாதுகாப்பு சம்பந்தப்பட்டது,'' என்றார்.
--
மீடியா மீது பாய்ச்சல்: சூதாட்ட பிரச்னையில் பாகிஸ்தான் மீடியா, சரியாக உதவவில்லை என்று சல்மான் பட் சகோதரி ஆவேசமாக கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,""சல்மான் பட் மீதான விசாரணை நடந்த போது, நீங்கள் எவ்விதத்திலும் <உதவவில்லை. நீங்கள் <<உண்மையில் மீடியாவே இல்லை,'' என, கோபமாக தெரிவித்தார்.
--
முழு விசாரணை நடத்த வேண்டும்: லார்ட்ஸ் டெஸ்டில் நடந்த சூதாட்டத்துக்கு மட்டும் தான் லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி பங்கேற்ற போட்டிகள் <உட்பட, அனைத்தையும் ஐ.சி.சி., விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னால் கேப்டன் நாசர் ஹுசைன் கூறுகையில்,""கடந்த 2000ல் கராச்சியில் நடந்த டெஸ்டில், பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் இருந்து, திடீரென குறைந்த ரன்களுக்கு சுருண்டது. இந்த போட்டியின் போது ஏதோ நடந்துள்ளது என்று மட்டும் எனக்கு அப்போது தெரிந்தது,'' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...