|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 November, 2011

கனிமொழி ஜாமின்மனு தள்ளுபடி 11 ம் தேதி வழக்கு விசாரணை துவங்கும்!


2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி கடந்த 5மாத காலமாக சிறையில் இருக்கும் கனிமொழிக்கு இன்றாவது ஜாமின் கிடைத்து விடுமா என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பில் தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் டில்லியில் முகாமிட்டிருந்தனர். ஆனால் இன்று ஜாமின் வழங்க முடியாது என்று நீதிபதி மனுவை தள்ளுபடி செய்துவிட்டார் . வரவிருக்கும் 11 ம் தேதி வழக்கு விசாரணை துவங்கும் என்றும் நீதிபதி கூறினார். 

ஜாமின் மறுக்க நீதிபதி கூறும் காரணம் என்ன ? : ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி கனிமொழி மக்களுக்கான பொது நிதியை தனது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தியுள்ளார் என்றும், இது மாபெரும்குற்றமாக கருதப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர் தெரிவிக்கும் காரணத்தில் ; கனிமொழி ஒரு பெண் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று ஒரு கற்பனையான ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. இது ஏற்க கூடியது அல்ல. நாட்டிற்கு பெரும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிற குற்றம் புரிந்துள்ளார். சமுதாயத்தில் ஒரு உயர்ந்த பொறுப்பில் எம்.பி.,யாக இரு்ககிறார் என்பதற்காக குற்றப்பத்திரிகை விஷயத்தில் இவர்களை வேறுபடுத்தி பார்க்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் உரிமையும் முக்கியம்தான். இருந்தாலும் இவருக்கு ஜாமின் வழங்க முகாந்திரம் இல்லை. எந்தவொரு நிர்பந்தம் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை அத்துடன் வழக்கின் தன்மை மற்றும் உண்மைநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பி்ககப்படுகிறது. இதனால் இவருக்கு ஜாமின் வழங்க முடியாது என்று கை விரித்து விட்டார்.

கனிமொழியின் மகிழ்ச்சியும்- கண்ணீரும் : இன்று நீதிபதி அறிவிக்கும் ஜாமின் உத்தரவில் தமக்கு ஜாதகமான தகவலே இருக்கும் என்ற மகிழ்ச்சியில் கனிமொழி இருந்தார். இவர் கோர்ட்டுக்கு வந்தபோது சிரித்த முகத்துடன் எப்போதையும் விட சற்று குதூகலமாக இருந்தார். ஆனால் நீதிபதி உத்தரவு வந்ததும் கனியின் முகம் இறுகியது. கண்ணீர் விட்டு அழுதார். இதனை பார்த்த தாயார் ராஜத்தியும் கண்ணீர் விட்டார். தேம்பி, தேம்பி அழுத சோகத்தினாலல்பட, படத்தார். அருகில் இருந்த எம்.பி.,க்கள் தேற்றினர். கோர்ட் அருகே காத்திருந்த தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் கலங்கி போயினர். இதற்கிடையில் ஜாமின் நிராகரிக்கப்பட்டதை அடுத்து ஐகோர்ட்டில் மேல் மனு தாக்கல் செய்யப்படும் என தி.மு.க, வட்டாரம் தெரிவிக்கிறது.

பல முறை எதிர்பார்த்து ஏமாந்த கனி: ஸ்பெக்ட்ரம் முறைகேடு புகார் எழுந்த நாள் முதல் கனி எப்போது விசாரணைக்கு அழைக்கப்படுவாரோ என்ற திகில் இருந்து வந்தது. பின்னர் மே மாதம் சி.பி.ஐ., தாக்கல் முதல் தகவல் அறிக்கையில் கனிமொழி பெயரும் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து இவர் கைது செய்யப்படுவாரோ என்ற அச்சம் இருந்தது. கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டதும், ஆஜராகியது முதல் சில நாட்களுக்கு கோர்ட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்று நீதிபதி ஆணையிட்டார். இதனையடுத்து இந்தியாவில் வாதத்தில் சிறந்து விளங்கும் பிரபல ராம்ஜெத்மலானி மூலம் கனிக்கு ஜாமின் வழங்க வேண்டும், கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் நீதிபதி அவரது ஜாமின் மனுவை நிராகரித்தார் இதனையடுத்து கடந்த மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டார். ஒரு மாதம் சிறையில் இருந்த பிறகும் ஒரு ஜாமின் மனு தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதுவும் நிராகரிக்கப்பட்டது. கீழ் கோர்ட்டில் ஜாமின் கோரலாம் என்றதும் மீண்டும் ஒரு ஜாமின் மனு தாக்கலானது. இதில் விசாரணை முடிந்து விட்டதா , குற்ப்பத்திரிகை எப்போது தாக்கல் செய்யப்படும் என விவரம் தெரிய வேண்டும் என்று கனியின் வக்கீல் வாதாடினார். இதனால் ஜாமின் மனு ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி பல முறை கனிக்கு ஜாமின் கிடைக்குமா , கிடைக்குமா என்று பல நாள் எதிர்பார்ப்பு இருந்து வந்தது இன்றும் நிறைவேறாமல் போனது. இன்று நடந்த மனு விசாரணையின் போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி, கணவர் அரவிந்த், மகன் ஆதித்யா, ஆகியோர் கோர்ட்டில் இருந்தனரர்ர்.

கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி: தொலைதொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேட்டில் எம்.பி.,கனிமொழிக்கும் தொடர்பு இருந்தது சி.பி.ஐ., மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆதாயம் பெற்றதற்காக ஸ்வான் என்ற நிறுவனத்தினர் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடியை கொடுத்தனர். இது கடனாக பெறப்பட்டது என்று கனி மொழி சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக சி.பி.ஐ., தாக்கல் செய்திருந்த குற்றச்சாட்டை ஏற்று ஆதாராம் இருப்பதாக உணவர்வதாகவும் நீதிபதி ஓ.பி.,சைனி கூறியிருந்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகி விட்டால் ஜாமின் வழங்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் இன்று ஜாமின் கிடைத்து விடும் என வக்கீல்கள் நம்பி இருந்தனர். கனிமொழியுடன் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குனர் ஆசீப்பால்வா, திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி மற்றும் ராஜீவ்அகர்வால் ஆகியோர் ஜாமின் கேட்டிருந்தனர். மனு விசாரணை வருவதையொட்டி இன்று கனிமொழி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவரது ஜாமின் மனு கடந்த 24 ம் தேதி விசாரணைக்கு வந்தது . இதில் சி.பி.ஐ., தனது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. இதனால் அவரை, நீதிபதி ஜாமினில் விடுதலை செய்வார் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தீபாவளி கொண்டாடும் நேரத்தில் அவர் வெளியே வருவது கூடுதல் எதிர்ப்பார்ப்பாகவும் இருந்தது.குறிப்பாக வெள்ளிக்கிழமை ( 21 ம் தேதி ) டில்லிக்கு சென்ற தி.மு.க., தலைவர் கருணாநிதி, ஜாமின் பெறும் கனிமொழியை அழைத்து கொண்டுதான் சென்னை திரும்புவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் நீதிபதி தனது தீர்ப்பை 3 ம் தேதி ( இன்று ) அறிவிப்பதாக கூறியதை அடுத்து இன்றும் நம்பிக்கையில் தி.மு.க.,வினரும், கனியின் குடும்பத்தினரும் திக், திக்., மனதுடன் காத்திருந்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...