2ஜி வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கைது செய்யப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்துவிட்டன. இந்த 9 மாதங்களில் இதுவரை ஒருமுறைகூட ஜாமீனில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இதர நபர்கள் அனைவரும் ஜாமீன் கோரி நீதிமன்றங்களின் கதவைத் தட்டியுள்ளனர். தொழில்ரீதியாக வழக்கறிஞரான ஆ.ராசாதான் 2ஜி வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டவர். அவர் இதுவரை ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என எந்த நீதிமன்றத்தையும் அணுகவில்லை. ஆனால் அவரது கட்சியைச் சேர்ந்த கனிமொழி எம்பி, இந்த 3 நீதிமன்றங்களின் கதவுகளையும் தட்டிப் பார்த்துவிட்டார். ஆனால் இதுவரை ஜாமீன் கிடைத்தபாடில்லை. ஆ.ராசா ஜாமீன் மனு தாக்கல் செய்யாததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. 2ஜி வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதால் ஜாமீன் கேட்டாலும் கிடைக்காது என்பதால் அவர் மனுத்தாக்கல் செய்யவில்லை என்று சிலரும் வழக்கறிஞர் என்பதால் இந்த வழக்கில் தன் வாதத்திறமை மூலம் தான் ஒரு அப்பாவி என்பதை நிரூபிக்கப் போவதாகவும், அதுவரை திகார் சிறையில் இருப்பதே தனக்கு பாதுகாப்பு என அவர் கருதுவதாலும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யாமல் உள்ளார் என்று சிலரும்
No comments:
Post a Comment