வங்கிகளில் செக் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி
முடிவு செய்திருக்கிறார். ஆன்லைன் மூலமான பயன்பாட்டை ஊக்குவிக்கும்
வகையில் செக் பயன்பாட்டுக்கு கணிசமாக ஒரு தொகையை பிடித்தம் செய்யவும்
தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
செக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் அதே நேரத்தில் எத்தனை சதவீதத்தை
கட்டணமாக வசூலிப்பது என்பதை ரிசர்வ் வங்கி தீர்மானிக்கவில்லை. செக்
புத்தகங்களுக்கு அதிக கட்டணத்தை வசூலிப்பது என்பதும் ரிசர்வ் வங்கியின்
யோசனை.இதற்காக மக்களிடம் கருத்து கேட்புகளைக் கோருகிறது ரிசர்வ் வங்கி..
ஆன்லைன் பரிமாற்றத்துக்கு என்ன மாதிரியான சலுகைகள் கொடுக்கலாம்., செக்
பயன்பாட்டுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்பது பற்றி
ரிசர்வ் வங்கிக்கு கருத்து தெரிவிக்கலாமாம்.
No comments:
Post a Comment