ஊழலை எதிர்த்து போராடும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வருகிற 16ந் தேதி அன்று
பிரோஷ் ஷா கோட்லா மைதானத் துக்கு அருகே உண்ணாவிரத போராட்டம்
மேற்கொள்கிறார்.
உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முந்தைய நாளான 15ந் தேதி இரவு 7 மணிக்கு அன்னா ஹசாரே நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். வலிமையான ஜன லோக்பால் சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து, அன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் பொது மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அணைக்கும்படி அன்னா ஹசாரே வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
தற்போது நாம் அனுபவித்து வருவது முழுமையான சுதந்திரம் அல்ல. மின் விளக்குகளை அணைக்கும் நேரத்தில் கல்வி அறிவின்மை, வறுமை மற்றும் ஊழலை இந்த நாட்டில் இருந்து அகற்றும் நம்பிக்கை ஒளிக்கீற்றாக, அகல் விளக்குகளை ஏற்றி வைக்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த தகவலை ஹசாரே குழுவை சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment