|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 August, 2011

திராவிட கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை! இந்த ஆளு கமொடிக்கு அளவே இல்லாம போயிட்டுருக்கு...!!

கடந்த, 49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார். வேலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க.,பொதுக் குழு கூட்டம் வேலூர் அடுத்த சத்துவாச்சாரியில்நடந்தது. பா.ம.க., மாநில தலைவர் மணி தலைமை வகித்தார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: திராவிட கட்சிகளால் தமிழகம் சீரழிந்து விட்டது. இப்போதாவது தனித்து போட்டி என்ற எடுத்துள்ள முடிவில் உறுதியாக இருப்பீர்களா என, என்னிடம் பலர் கேட்கின்றனர். காரிருள் உள்ள வரை, கடல் நீர் இருக்கும் வரை தனித்துப் போட்டி என்ற கொள்கையில் இருப்போம். காங்கிரஸ் தமிழகத்தை சீரழித்து விட்டது. இதை மாற்ற வேண்டும் .காங்கிரஸை ஒழிப்பது தான் திராவிடக் கட்சிகளின் கொள்கை என, 1949ம் ஆண்டில் இருந்து கூறி வந்தவர்கள் கொள்கை அழிந்து விட்டது. எனவே, 49 ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிடக் கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை. திராவிட கட்சிகளின் ஆட்சியை மாற்ற நம்மால் தான் முடியும். இலவசங்கள், சினிமா, மது கொடுத்து ஏமாற்றி விட்டனர். விவசாயம் அழிந்து விட்டது. திராவிட கட்சிகள் கட்டாய கல்வி, இலவச கல்வி, தரமான கல்வியை அளிக்கவில்லை. இதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். திராவிடக் கட்சிகளை தூக்கி எறிய வேண்டும். இந்த கட்சி கொடிகளை பார்க்கும் போது இந்த எண்ணம் நமக்கு வர வேண்டும். இப்போது சமச் சீர் கல்வி திட்டம் கொண்டு வர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நிறைய மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், சி.பி.எஸ்.சி.,க்கு மாற்றுவதற்கு தயாராகி வருகின்றனர். இப்படி மாற்றினால் இந்த பள்ளிகள் முன் கடுமையான முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு மொழி பாடமாக இருக்க வேண்டும். அனைத்து பாடங்களும் தமிழில் தான் இருக்க வேண்டும். இதை அமுல்படுத்தாத பள்ளிகள் அரசுடமையாக்கப்படும் என இந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இந்த தைரியம் அரசுக்கு உள்ளதா? சாயக் கழிவுகளால் நொய்யலாறு மாசுபட்டுள்ளதை தடுக்க, 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர். ஆனால் பாலாற்றை தூய்மையாக்க இந்த அரசு என்ன செய்தது? தமிழகம் முழுவதும் காயம்பட்டு கிடக்கின்றது.
ரணம் அதிகம் உள்ளது. திராவிட கட்சிகள் இந்தளவு பாழ்படுத்தி விட்டது. ரணத்தை ஆற்ற வேண்டிய பொறுப்பு, பா.ம.க.,வுக்கு வந்து விட்டது. வரும் உள்ளாட்சி தேர்தலில், பா.ம.க., வை மட்டும் தான் வெற்றி பெறணும். மற்ற கட்சிகளை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...