வி வெப்பமடைவதைத் தடுப்பதற்காக ஜப்பானின் கியோட்டோ நகரில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டிலிருந்து விலகுவதாக கனடா அறிவித்துள்ளது.கரியமில
வாயு வெளியேற்றுவதைக் குறைப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின்
வழிகாட்டுதலின்படி கியோட்டோவில் 1997-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நடைபெற்ற
மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டது. கரியமில வாயுவை அதிகம்
வெளியேற்றும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட இரு நாடுகளும் இந்த மாநாட்டில்
எட்டப்பட்ட தீர்மான வரம்பிற்குள் வரவில்லை. எனவே உடன்பாட்டிலிருந்து
விலகுவதாக கனடா அறிவித்துள்ளது.கனடாவின் விலகல் தீர்மானத்தை அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் பீட்டர் கென்ட் முறைப்படி வெளியிட்டார்.தென்னாப்பிரிக்காவின்
டர்பன் நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது.
இம்மாநாட்டில் 194 நாடுகள் பங்கேற்றன. அப்போது கரியமில வாயுவைக்
கட்டுப்படுத்துவதற்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதை அனைத்து
நாடுகளும் ஏற்றுக் கொண்டன. மாநாடு முடிவடைந்த இரண்டே நாளில் கியோட்டோ
உடன்பாட்டிலிருந்து விலகுவதாக கனடா அறிவித்துள்ளது. கியோட்டோ
உடன்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அதிலிருந்து விலக
முடிவு செய்யப்பட்டதாக கென்ட் அறிவித்தார். இப்போது டர்பனில் எட்டப்பட்ட
தீர்மானத்தின்படி நடக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். டர்பன்
தீர்மானத்தை பின்பற்ற முக்கிய நாடுகள் முன்வந்துள்ளதாக அவர் கூறினார். இந்த
வார தொடக்கத்தில் உலக அளவில் கரியமில வாயுவை 30 சதவீத அளவுக்கு
வெளியேற்றும் நாடுகள் கியோட்டோ உடன்பாட்டு பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
அதில் கனடா விலகியதால் இந்த அளவு 13 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது.அமெரிக்காவும்,
சீனாவும் கியோட்டோ உடன்பாட்டு வரம்புக்குள் வராததால், இந்த உடன்படிக்கை
சரிவர செயல்படுத்தப்படாது என்பதாலேயே இதிலிருந்து விலக கனடா முடிவு
செய்ததாக கென்ட் அறிவித்தார். சர்வதேச அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில்
கனடாவின் பங்கு 2 சதவீதமாகும். இருப்பினும் சர்வதேச அளவில் இந்த
உடன்படிக்கையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டதாக கென்ட் வெளியிட்ட
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment