உலகத்தில் எங்த
மண்ணிலும் விளையாத அறிய வாசானை திரவியமான “சாந்து” என்று இலக்கியங்களில்
சொல்லப்படும், சந்தனமரம் தமிழகம் மற்றும் கர்நாடகத்திலும் இனைந்துள்ள
மலைப்பகுதிகளில் மட்டுமே விளைகிறது. அதுவும் குறிப்பாக சேலம், தருமபுரி,
ஈரோடு, கோவை மாவட்டங்களில் தான் அதிகம் விளைகிறது.முன்பெல்லாம்
தமிழகத்தின் சவ்வதுமலை, கவராயன் மலை, கொல்லிமலை போன்ற பகுதிகளிலும் மேற்கு
தொடர்ச்சி மலைகளிலும் மிகுதியாக காணப்பட்ட சந்தனமரம், வாசனை எண்ணை, மற்றும்
கலைப்பொருட்கள் செய்வதற்காக சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்தி செல்லப்பட்டு
விட்டதாலும்,
வனத்துறையின் சார்பில் காடுகளில் தேவையான அளவுக்கு மரக்கன்றுகளை நடவு செய்யாததாலும், தனியார்
நிலங்களில் வளர்க்கப்படும் மரங்களை அவர்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும்
அந்த மரங்கள் அரசுக்கே சொந்தம் என்று வனத்துறையினர் வெட்டிக் கொண்டு
போனதாலும் தமிழகத்தில் இப்போது சந்தனமரங்களை கண்ணால் பார்ப்பதே அரிதாகி
விட்டது.சந்தனமரங்களுக்கு
தட்டுப்பாடு வந்தவுடன் தனியார் நிலங்களிலும், அரசு அனுமதியோடு சந்தன மரம்
வளர்க்கலாம் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு தமிழக வனத்துறை அறிவித்தது...
இப்படி வளர்ந்த மரங்களை வெட்டி பக்கத்தில் உள்ள அரசு மரக்கிடங்கில் வைத்து
ஏலம் விடப்படும் என்றும், ஏலத்தில் கிடைக்கும் தொகையில் நில
உரிமையாளர்களுக்கு 47.5 விழுக்காடும், மீதியை அரசும் எடுத்துக்கொள்ளும்
என்றும் அறிவித்தது.
இப்படி வீடுகளில், கல்வி நிறுவனங்கள்,
மற்றும் தொழிற்ச்சாலைகள் போன்ற இடங்களில் வளர்க்கும் சந்தன மரங்களுக்கு
வனத்துறையிடம் அனுமதியும் பெற தேவையில்லை, முதிர்ந்த பின்னர் நீங்கள்
வெட்டி வனத்துறையிடம் கொடுங்கள் நாகல விற்கும் விலையில் உங்களுக்கு உரிய
பங்கை கொடுத்துவிடுகிறோம் என்று அறிவித்துள்ளார்கள். தரமான சந்தன நாற்றுகள்
சேலம் வணச்சரகத்தில் 14 ரூபாய் விலையில் பொதுமக்களுக்கு வழங்குகிறோம்
தேவையானவர்கள் வாங்கி வீடுகளில் சந்தன மரம் வளருங்கள் என்று
அறிவித்துள்ளனர்.
தொடர்புக்கு- சேலம் மாவட்ட வண அலுவலர். தொலைபேசி-0427 2415097.
தொடர்புக்கு- சேலம் மாவட்ட வண அலுவலர். தொலைபேசி-0427 2415097.
ஆனாலும், விவசாயிகள் யாரும் சந்தன மரம் வளர்க்க முன்வரவில்லை. இதற்க்கு காரணம், விவசாயிகள் காடு தோட்டங்களில் வளர்க்கும் சந்தன மரங்களை திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் இரவில் புகுந்து மரத்தை வெட்டி கொண்டுபோய் விடுகிறார்கள். சில இடங்களில் இப்படி நடந்த மோதல்களில் உயிரிழப்புகள் கூட ஏற்ப்பட்டுள்ளது.
இப்போது நான்கு முதிர்ந்த சந்தனமரத்தின் கட்டை சராசரியாக கிலோ 7500 முதல் 9000 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை மதிப்பு மிக்க இந்த அறிய பொக்கிசத்தை வளர்க்க பொதுமக்கள் பலரும் பயப்படுவதால், இப்போது தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் வீடுகளில் சந்தனமரம் வளருங்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment