9வது ஆண்டு சென்னை சர்வதேச பட விழா சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.செய்தி ஒளி பரப்பு துறை
செயலாளர் ராஜாராம், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இந்தி பட இயக்குனர்
சேகர் கபூர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவர்
டி.ஜி.தியாகராஜன், பிலிம்சேம்பர் செயலாளர்கள் ஆனந்தா எல்.சுரேஷ், ரவி
கொட்டாரக்கரா, இந்தோ சினி அப்ரிசியேஷன் தலைவர் கண்ணன், துணை தலைவர்
ராமகிருஷ்ணன், செய லாளர் தங்கராஜ், நடிகர்கள் பார்த்திபன், கணேஷ்
வெங்கட்ராம், நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், ரோகிணி,
பாத்திமாபாபு, அபர்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக நடிகைகள் கார்த்திகா, தன்ஷிகா, ப்ரியா ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.ட விழா வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. 9 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் 50 நாடுகளை சேர்ந்த 153 படங்கள் திரையிடப்படுகின்றன. சத்யம், உட்லண்ட்ஸ், உட்லண்ட் சிம்பொனி, ஐநாக்ஸ், பிலிம்சேம்பர் ஆகிய தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுகின்றன.இவ்விழாவில் போட்டி
பிரிவில் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’, விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’
உள்ளிட்ட 12 தமிழ் படங்கள் திரையிடப்படுகின்றன. நடுவர்களாக பிரதாப்போதன்,
ரோகிணி, மதன் உள்ளனர். இந்த விழாவுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர்
ஜெயலலிதா 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்.
No comments:
Post a Comment