எடை குறைவான காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்த நிறுவனங்களில் திடீர் சோதனை
நடத்திய அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.மதுரையில் வீடுகளுக்கு வினியோகம்
செய்யும் காஸ் சிலிண்டர்களின் எடை அளவு குறைவாக இருப்பதாக தொழிலாளர்
நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியனுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து
ஆய்வு செய்ய தொழிலாளர் நலத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.கூடுதல்
தொழிலாளர் கமிஷனர் ராஜா, இணைகமிஷனர் ராதாகிருஷ்ண பாண்டியன் ஆலோசனைப்படி,
உதவி கமிஷனர் என்.கோவிந்தன் குழுவினர் 38 இடங்களில் சோதனை நடத்தினர்.
சிலிண்டர்களை எடை போட்டு பார்த்ததில் 12 சிலிண்டர்கள் 300 கிராம் முதல்
1200 கிராம் வரை எடை குறைவாக இருந்தன.இவற்றை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு
ரூ. 12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகள் கூறுகையில்,
""சிலிண்டர்கள் எடை குறைவாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. எடை
குறைந்து இருப்பதாக தெரிந்தால், தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தை 0452-
232 4388 ல் தொடர்பு கொள்ளலாம்'' என்றனர்.
No comments:
Post a Comment