|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 August, 2011

ஸ்கேன் கதிர்வீச்சு குறித்து நோயாளிகளுக்கு தெரிவிக்கப்படவேண்டும்!

சி.டி. ஸ்கேன் போன்ற மருத்துவப் பரிசோதனைகளின் போது ஏற்படும் கதிர்வீச்சுத் தாக்கம் குறித்து நோயாளிகளுக்கு முன்னமேயே அறிவுறுத்துவதுதான் முறை என்று மருத்துவத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட அது போன்ற பிற பரிசோதனைகளின் போது இயந்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுத் தாக்கம் புற்று நோய் உள்ளிட்ட பிற நோய்களுக்குக் காரணமாகும் அபாயம் உள்ளது. மேலும் செல்லின் மரபுப் பூர்வாங்கப் படிவத்தில் (gene blue-print) சேதம் ஏற்படுத்துகிறது இதனால் பல ஆரோக்கியக் கேடுகள் ஏற்படுகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"சில வேளைகளில் செல்கள் செயல்படாமல் போகும், அல்லது தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் அல்லது இறந்து விடும். ஆனால் மேலும் சில வேளைகளில் செல் பல்கிப் பெருகும் அதாவது கட்டுப்படுத்த முடியாத வகையில் பல்கிப்பெருகும், அப்போது புற்றுநோய் ஏற்படும் என்று கங்காராம் மருத்துவமனையின் சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நிபுணர் டி.பி.எஸ். புக்சி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும், பரிசோதனை மையங்களிலும் சி.டி. மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன்களால் உடலில் உள்வாங்கப்படும் கதிர்வீச்சு அளவு குறித்த விவரம் உள்ளது.இதனால் ஒரு நோயாளியை ஸ்கேன் செய்யும் முன் அவரிடம் கதிர்வீச்சு அளவு குறித்து கூறப்படவேண்டும் என்பதை ஒரு கொள்கையாக அரசு வடிவமைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

டெல்லிய்ல் உள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவனமையின் மருத்துவர் ஒருவரும் இந்தக் கதிர்வீச்சு அபாயத்தை உறுதி செய்துள்ளார், அதாவது சி.டி. ஸ்கேன்கள் கதிர்வீச்சுத் தாக்கத்தின் மிகப்பெரிய ஆதாரமாகும். திடீர் கதிர்வீச்சு அல்லது நீண்ட நாளைய கதிர்வீச்சுத் தாக்கம் எலும்பு செல்களை செயலிழக்கச் செய்வதோடு, சிலருக்கு விதையிழப்பும் ஏற்படுகிறது என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...