ஒன்பதாம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்டு, கொடூர தாக்குதலுக்கு
உள்ளானதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு "பெண்கள் பாதுகாப்புக்கு,
உத்தரவாதம் இல்லாத நகரமாக, டில்லி மாறி வருகிறது' என, முதல்வர் ஷீலா
தீட்ஷித் தெரிவித்துள்ளார். அவர், "பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என,
பாரதிய ஜனதா வலியுறுத்தி உள்ளது. மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, டில்லியில் போராட்டங்கள் நடந்தன.
அதன் விளைவாக, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக, கடுமையான தண்டனை அளிக்கும்,
அவசர சட்டம், சில நாட்களுக்கு முன், பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில்,
டில்லியில் மீண்டும் பயங்கர கற்பழிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லஜ்பத்நகரில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளதுடன்,
தொண்டையில் இரும்பு கம்பியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில்
சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து, முதல்வர், ஷீலா
தீட்ஷித்திடம், நிருபர்கள் கேள்வி?
அதற்கு பதிலளித்த ஷீலா,""தலைநகர் டில்லியில், பெண்களுக்கு
பாதுகாப்பு இல்லை. பெண்களின் பாதுகாப்புக்கு, உத்தரவாதம் இல்லாத நகரமாக,
டில்லி மாறி வருகிறது. பாதுகாப்பு அளிக்க போலீசார் உள்ளனர். எனினும்,
அவர்கள், பெண்கள் பாதுகாப்பை, உறுதிபடுத்த தவறி வருகின்றனர்,'' என்றார்.டில்லி
முதல்வரின் பதில், தலைநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு, பல
தரப்பில் இருந்தும், எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியுள்ளன.
No comments:
Post a Comment