உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் சிறந்த 500 பெரிய நிறுவனங்களில் இந்தியன் ஆயில் உட்பட 8 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.
பார்ச்சூன் என்ற இதழ்
ஒவ்வொரு ஆண்டும் அதிக வருமானம் ஈட்டிய 500 பெரிய நிறுவனங்களை பட்டியலிட்டு
வருகிறது. அவ்வாறாக இந்த ஆண்டின் சிறந்த முன்னணி நிறுவனங்களின் பட்டியலை
வெளியிட்டது. அதில் இடம் பிடித்துள்ள 8 இந்திய நிறுவனங்களில் 5 நிறுவனங்கள்
அரசு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியன் ஆயில் நிறுவனம் முன்னணி
வகிப்பதுடன், டாப் 100ல் இடம்பிடித்த ஒரே இந்திய நிறுவனம் என்ற
பெருமைமையும் பெற்றுள்ளது. கடந்த 2010ம் ஆண்டுன் ஒப்பிடுகையில் ஸ்டேட்
பாங்க் ஆப் இந்தியாவை தவிர மற்ற 7 நிறுவனங்களும் இந்த ஆண்டில் நல்ல
முன்னேற்றம் கண்டுள்ளன.
அதில் இந்தியன் ஆயில் 98வது இடத்தையும் (125), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 134 (175), பாரத் பெட்ரோலியம் 271 (307), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 291 (282), இந்துஸ்தான் பெட்ரோலியம் 335 (354), டாடா மோட்டார்ஸ் 358 (410), ஓஎன்ஜிசி 360 (413), டாடா ஸ்டீல் 369வது இடத்தையும் (410) பிடித்தன. இந்த பட்டியலில் சில்லரை வியாபார நிறுவனமான வால்&மார்ட், ராயல் டட்ச் ஷெல், எக்ஸான் மொபைல் ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.

No comments:
Post a Comment