நீண்ட கால நண்பராக இருக்கும் ம.தி.மு.க.,வை மதிக்கவில்லை, இக்கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் ஜெ., சுணக்கம் காட்டுகிறார் என்றும் இது தொடர்பாக ம.தி.மு.க., உயர்நிலை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ம.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று காலை தாயகத்தில் உயர்நிலை கூட்டம் கூடி விவாதித்து வருகின்றனர்.மாலையில் மாவட்ட செயலர்களுடன் வைகோ கலந்து பேசுகிறார். எடுக்கப்பட வேண்டிய நிலை குறித்து முக்கிய முடிவுகள் செய்யப்படும் கூட்டமாக இது இருக்கும்.
இதற்கிடையில் அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் அவசரமாக வைகோவை சந்தித்து பேசினர். இந்த பேச்சில் 13 தொகுதிகளும் வரும் காலத்தில் ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் தருவோம் என்று தெரிவித்தனர். ஆனால் வைகோ 16 சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டு தருமாறு கேட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து இது குறித்த விவரத்தை ஜெ,. யிடம் எடுத்து சொல்ல அ.தி.மு.க,. நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்றனர்.

No comments:
Post a Comment