|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 March, 2011

சேது சமுத்திரம் திட்டம் சாப்பிட்டாச்சு அடுத்து ?


தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
‌தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையி்ல், கல்வியை மாநில பட்டிய‌லில் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தும், தமிழகத்தில் மேல் முறையீட்டு மையம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம், நுழைவு தேர்வு கூடாது என்பதை தி.மு.க., வலியுறுத்தும், நதிகளை தேசியமயமாக்கவும், 12வது ஐந்தாண்டு திட்டத்தில் தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். சென்னை ஐகோர்ட்டில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகள் தமிழில் எழுத அனுமதிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் நியாயமான வாடகையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருக்குறளை தேசய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறத்துவோம், ஈழத்தமிழர் அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். கரும்பு பருத்தி, காய்கறி உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுப்போம். நகர்புறங்களில் நுகர்வோம் யைம் அமைக்க நடவடிககை எடுக்கப்படும். சிறப்பாக இயங்கும் தமிழகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.இலவச மின்சாரத்தை தென்னை வளர்ப்பு, பணப்பயிர் போன்றவற்றிற்க்கும் விரிவு படுத்துவோம். விவசாய நிலங்‌களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுப்போம், சொட்டு நீர் இல்லா விவசாயிகளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கரும்பு உள்ளிட்டவற்றிற்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும், என தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.       

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...