பல்கலை நூற்றாண்டு கலையரங்கில் நேற்று நடந்தது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை வேந்தரும், தமிழக கவர்னருமான சுர்ஜித்சிங் பர்னாலா, விழாவிற்கு தலைமை வகித்தார். விழாவில், பி.வி. எஸ்சி., - பி.டெக்., ( எப்.பி.டி.,) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 461 பேருக்கு, கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பட்டங்களை வழங்கினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்லையில், பி.வி.எஸ்சி., பட்டம்பெற்ற அனுஷா பாலகிருஷ்ணனுக்கு, பாடவாரியாக சிறந்து விளங்கியதற்காக 29 தங்கப் பதக்கங்களையும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பி.வி.எஸ்சி., பயின்ற ரேவதிக்கு, 11 தங்கப் பதக்கங்களையும், கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வழங்கினார்.
No comments:
Post a Comment