ஆந்திர மாநிலம் ஸ்ரீகா குளம் மாவட்டம் மெத்த பேட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் ராவ் (ராணுவ வீரர்). இவரது மனைவி விஜயலட்சுமி. கணவரின் சித்ரவதையால் விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். சங்கர் ராவ் மீது வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.வழக்கில் தனக்கு எதிராக சாட்சி சொன்னவர்களை பழிவாங்க சங்கர் ராவ் திட்டம் போட்டார். இதன்படி அவர் சிறையில் இருந்து பெயிலில் வெளியே வந்தார்.
பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த தனது மகள் மவுனசா (7), மகன் திவாகர் (5) ஆகியோரை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார்.அந்த குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்தார். அவர்கள் மயங்கியதும் தலையை துண்டாக வெட்டினார். பின்னர் அந்த தலைகளை வீட்டு குளிர் சாதன பெட்டியில் வைத்தார்.பின்னர் அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி ராவ் என்பவருடன் நைசாக பேசி தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். வீட்டுக்கு வந்த அவரை அரிவாளால் வெட்டினார். பின்னர் வெங்கட்ராவ் என்பவரை கோவிலுக்கு வரும்படி கூறினார்.
சோபேஸ்வரர் கோவிலுக்கு வந்த அவரை அங்கு வைத்து வெட்டிக் கொன்றார். பின்னர் வெடிகுண்டுடன் கணபதி என்பவருக்கு சொந்தமான மாட்டுக் கொட்டகை மீது வீசி தீ வைத்தார். இதில் மாட்டுக் கொட்டகை எரிந்ததுடன் மாடுகளும் கருகி செத்தது.இது தவிர பார்வதி, தமயந்தி உள்பட 3 பேரை தூங்கிக்கொண்டு இருந்தவர்களை தட்டி எழுப்பி கொலை செய்தார். ஒரே இரவில் 7 பேரை கொலை செய்த பின் மறுநாள் போலீசில் சரண் அடைந்தான். இந்த கொலை சம்பவம் கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. இந்த கொலை வழக்கு ஸ்ரீகாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. 11 மாதமாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.சங்கர் ராவுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ராமனாஜி ராவ் தீர்ப்பு வழங்கினார்
No comments:
Post a Comment