இரு குழந்தைகளின் தாயான மகள் வேறொருவருடன் ஓட்டம் அவமானத்தில் தாய் தற்கொலை!
இரு குழந்தைகளின் தாயான, தனது மகள் வேறொரு நபருடன் ஓடிவிட்ட அவமானம் தாங்காமல் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளம்-திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் மலையாண்டி மனைவி அம்மாபொன்னு (50). இவரது மகள் கலாவதி. ஏற்கனவே திருமணம் நடைபெற்று இரு குழந்தைகள் தாயான கலாவதி சமீபத்தில் வேறொரு நபருடன் ஓடிவிட்டார். துக்கத்துடன் அவமானமும் தாக்க, அம்மாபொன்னு 4 நாட்களுக்கு முன்னர் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர், சுகமடைந்து நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீட்டிற்கு வந்த அம்மாபொன்னு, துக்கம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெண்ணுக்கு 5 கணவர்கள்... ஒரே வீட்டில் குடித்தனம்?
அண்ணன் தம்பிகள் 5 பேரை திரௌபதி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பற்றி இதிகாசமான மகாபாரதத்தில் படித்திருப்போம். ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஒரு பெண் 5 கணவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் பெயர் ரஜோ வர்மா. 21 வயதாகும் அவர் தனது 5 கணவர்களுடன் டேராடூன் அருகே உள்ள கிராமத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த குழந்தைக்கு தந்தை யார் என்பது யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி கவலைப்படவும் இல்லையாம். இது பழங்காலமுறை என்றும் கூறும் ரஜோ, தனது தாயார் அண்ணன் தம்பிகள் மூன்று பேரை திருமணம் செய்து கொண்டு மனைவியாக வாழ்ந்தார். தனக்கும் அதுபோல ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது. என்கிறார் பெருமையாக! எங்களுடைய ஒரே அறை கொண்ட வீடுதான். பெட் கிடையாது, தரையில்தான் படுத்து உறங்குவோம். எங்களுக்குள் எந்த வித பொறாமையோ போட்டியோ கிடையாது என்கிறார் அந்தப் பெண். அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக சந்தேசாமாகவே வாழ்க்கிறோம் என்றும் கூறுகிறார் இந்த நவீன திரௌபதி.
3 குழந்தைகளின் தாய்… குடும்பத்தைக் காக்க சுமை தூக்கும் சோகம்.
வடமேற்கு ரயில்வேயில் ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் போர்ட்டராக இருந்தவர் மகாதேவ். இவருக்கு மஞ்சு தேவி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மகாதேவ் உடல் நலக் குறைவால் திடீரென மரணமடைந்துவிட்டார். கணவரின் இறப்புக்குப் பின்னர் பிழைப்புக்கு என்ன செய்வது என தெரியாமல் விழித்திருக்கிறார் மஞ்சு. கணவர் பார்த்த போர்ட்டர் வேலையை தான் பார்க்கலாம் என்ற தோன்றவே, அதிகாரிகளைப் போய் பார்த்திருக்கிறார். தனது நிலைமையை சொல்லி கணவன் பார்த்த வேலையை தனக்கு கொடுக்கும்படி கேட்டார். அதிகாரிகளும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து உடனடியாக வேலையில் சேர்ந்து விட்டார் மஞ்சு தேவி. ராஜஸ்தானின் ஒரே பெண் போர்ட்டர் என்பதால் பிரபலமாகி வருகிறார் மஞ்சு தேவி. ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகளும் பெண் போர்ட்டரை பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்துப் போய், அதன்பிறகு அவரிடம் தங்கள் பைகளை தூக்கிக் கொண்டு வரும் வேலையைத் தருகிறார்கள். இந்த பணி பற்றி கூறும் மஞ்சு தேவி, கணவர் திடீரென இறந்து விட்டார். எனக்கு படிப்பறிவு கிடையாது. அதனால் கணவன் செய்த போர்ட்டர் வேலையை செய்ய முடிவு செய்தேன். கொஞ்சம் கஷ்டமான வேலைதான். ஆனால் எனக்கு அதைத் தவிர வேறு வழியில்லை. கணவரின் நண்பர்கள்தான் அந்த யோசனையை சொன்னார்கள். அவர்களே அதற்கு ஏற்பாடும் செய்தார்கள் என்றார். 3 குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்த ரயில்வே அதிகாரிகளும் எனது கணவனின் போர்ட்டர் லைசன்ஸை எனக்கு கொடுத்தார்கள். இந்த தொழிலில் ஆண்கள்தான் அதிகம். நான் ஒருத்திதான் பெண். இருந்தாலும் சக போர்ட்டர்கள் உதவியால் வேலை கஷ்டம் தெரியவில்லை எனக் கூறுகிறார் மஞ்சு.
No comments:
Post a Comment