மாநில அளவில், குடும்ப வன்முறை தொடர்பான புகார் பதிவில், சென்னை முதலிடத்திலும். ஈரோடு மாவட்டம், இரண்டாவது இடத்திலும் உள்ளன.பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்களை தடுக்க, மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனினும், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து, அனைத்து மகளிர் காவல் நிலையம் , மாவட்ட சமூக நல அலுவலர், நீதித்துறை நடுவர் ஆகியோரிடம், பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக புகார் தெரிவிக்கலாம். மாநிலம் முழுவதும், 5 ஆண்டுகளில், சமூகநல பாதுகாப்பு அலுவலர்களிடம் கொடுக்கப்பட்ட புகாரில், சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.குடும்ப வன்முறை, கணவன் மற்றும் அவரது குடும்பாத்தார் மீது புகார், வரதட்சணை கொடுமை தொடர்பாக, 2,300 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில், 2,050 புகார்கள் தீர்வு காணப்பட்டு, தம்பதிகளுக்கு கவுன்சலிங் வழங்கி, சமரசத் தீர்வு காணப்பட்டுள்ளது.குடும்ப வன்முறை புகார் பதிவில், ஈரோடு மாவட்டம், இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில், 1,158 புகார்கள் பெறப்பட்டு, 730 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.இதுகுறித்து, சமூக நல அலுவலர் ஒருவர் கூறியதாவது:பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளால், பாதிக்கப்படும் பெண்கள் எங்களை அணுகினால், சட்ட உதவிகளை பெறமுடியும். பாதிக்கப்படும் பெண்களுக்கு, மனநல அலுவலர், சமூக ஆர்வலர்கள் முறையான கவுன்சலிங் கொடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment