இந்திய அரசாங்கம் அனைத்து மக்களுக்கும் உதவும் விதமாக ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கவுள்ளது. இதற்காக ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் டெவலப்மன்ட் என்ற போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். போட்டிக்கான கடைசிநாளாக மார்ச் 31, 2013ஐ நிர்ணயித்துள்ளது அரசு! எம்-கவர்னன்ஸ் என்ற அமைப்பின் வாயிலாக நடத்தப்படும் போட்டிக்கு பின்வரும் பிரிவுகளில் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை உருவாக்கவேண்டும்.
அரசு சேவைகள்,
கல்வி தொடர்பானவை,
சமூக வலைத்தளம்,
இ - ஹெல்த்
போட்டியின் முடிவுகள் ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியிடப்படும். வெற்றி பெறுபவருக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும். 2ஆம் பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொள்ள, அரசாங்க இணையதளம். http://appscontest.mgov.gov.in/mainpage.jsp செல்க. வெற்றிபெற வாழ்த்துக்கள். நண்பர்களுடன் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுங்கள், மற்றவர்க்கும் பயன்படட்டும்.
No comments:
Post a Comment