|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 June, 2011

வேலைவாய்ப்புக்கள் இனி இந்தியா, சீனா வசம் சென்று விடும்: ஒபாமா

இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் மாணவர்கள் வேலைவாய்ப்புகளை கைப்பற்றுவதில் முன்னணி பெற்று வருகிறார்கள். எனவே இனி அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அமெரிக்கர்களை அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் களத்தில் பணிக்கு பொருத்தமானவர்களை கண்டறிவது அமெரிக்க நிறுவனங்களுக்கு சிரமமாக உள்ளது. இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்ல அடையாளம் அல்ல என ஒபாமா வட கரோலினா, டர்ஹாமில் பேசும் போது தெரிவித்தார்.

இப்போது அமெரிக்காவில் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் நான்க்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் உள்ளனர். ஆனால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதற்கு மாறாக உள்ளது. இந்த வேலைகளுக்கு ஆசிரியர்கள் தான் வரவேண்டியுள்ளது. திறன் வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு பணியிடத்தை நிரப்புவது மிகவும் சிரமமாக உள்ளதாக தொழில்துறை பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல என்று ஒபாமா குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...