அதிகமாக மாசு ஏற்படுத்தி சுற்றுச்சூழலை மாசு படுத்துவோருக்கு மரண தண்டனை
வழங்கலாம் என புதிய அதிகாரத்தை நீதிமன்றங்களுக்கு வழங்கியுள்ளது சீன அரசு.
ஏற்கனவே, அதிக அளவில் சுற்றுச்சூழல் மாசு அடைந்த நாடாக சீனா உள்ளது.
அதிலும், உலகிலேயே சுற்றுசூழலில் அதிக மாசு படிந்த நகரங்களாக பீஜிங்,
ஷங்காய் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டுள்ளன.சுற்றுச்சூழல் மாசினால் சீனர்களுக்கு இளவயதிலேயே மரணம் நேரிடுவது
ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரச் சீர்கேட்டினால், ஏராளமான
சீன மக்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காகிறார்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
மேலும், மக்களின் ஆரோக்கியத்தை குறித்து அரசாங்கம் கவலைப் படுவதில்லை என்ற
குற்றச்சாட்டையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்நிலையில், அதிக மாசு
ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகளை இயக்கும் நபர்களுக்கு அதிகபட்சமாக மரண
தண்டனை அளிக்கும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கி நேற்று சீன அரசு
உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறும் வகையில் மாசு
ஏற்படுத்தும் நபர்களுக்கு கடுமையான தண்டனை மற்றும் சில முக்கிய மோசமான
நிகழ்வுகளுக்கு மரண தண்டனை வழங்கவும் இந்த புதிய அதிகாரம் வழிவகை செய்யும்
No comments:
Post a Comment