ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார் தனது மகள் கோபிகாவை ஏழை பள்ளிகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்தார். கலெக்டரின் இந்த நடவடிக்கையால் தற்போது ஈரோடு மாவட்டத்தில் பல பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் முனைப்புடன் உள்ளனர். மேலும் முன் உதாரணமாக திகழ்ந்த கலெக்டருக்கு அடுத்தப்படியாக மற்ற அரசு அதிகாரிகளும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வத்துடன் உள்ளனர்.
ஈரோடு குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டு இருக்கும் தனது மகள் கோபிகாவை மற்ற குழந்தைகளை எப்படி கவனித்து படிக்க வைக்கிறீர்களோ... அப்படிதான் படிக்க வைக்க வேண்டும். வேறு எந்த சிறப்பு சலுகையும் காட்டக் கூடாது என்றும் கலெக்டர் ஆனந்தகுமார் பள்ளி நிர்வாகத்தினரிடம் கூறி உள்ளார். கலெக்டரின் குழந்தை குமலன் குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டு இருப்பதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி அதிகாரிகளின் பார்வையும் குமலன்குட்டை தொடக்கப்பள்ளியிலேயே பதிந்துள்ளது.

No comments:
Post a Comment