|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 June, 2011

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை! இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன்!!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரின் போது, இலங்கை ராணுவத்தின் போர்க்குற்ற விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கோரிக்கை விடுத்துள்ளார்.தனி ஈழம் கோரி விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இலங்கை வாழ் தமிழ் போராளிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரின் போது, அதன் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த போரின் போது, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியது, கொத்துக் குண்டுகளை வீசியது உள்ளிட்ட போர் வீதிமீறல் நடந்துள்ளதாக பல்வேறு அமைப்புகள் கூறி வந்தன. இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள மனித உரிமை கழகம் கோரி வந்தது. இலங்கையில் போர் குற்றங்கள் நடைபெற்றது உண்மை என ஐ நா சபை நடத்திய விசாரணையிலும் தெரிய வந்துள்ளது. 

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த இந்தியா முயற்சி எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் புதிதாக பொறுப்பேற்ற ஜெயலலிதா தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில், இங்கிலாந்தின் தொலைக்காட்சி ஒன்றில், தமிழர்கள் கொலைச் செய்யப்படும் காட்சிகள் சில தினங்களுக்கு முன் வெளியாகின. மனதை உறைய வைக்கும் இக்காட்சிகள் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக நாடுகளின் தவைவர்கள் இலங்கை மீது கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கையில் மனித உரிமை மீறல் அப்பட்டமாக நடந்துள்ளன. ஆகவே இதுகுறித்து இலங்கை சுதந்திரமாக விசாரணை நடத்த வேண்டும் என இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார். இதை ஏற்காவிட்டால், இலங்கை மீது நடவடிக்கை எடுக்க மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து குரல் கொடுக்கும் என்று இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சர் அலிஸ்டர் பர்ட் கூறினார்.இதனிடையே, லண்டனில் உள்ள இலங்கை தூதரகம், தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அது ஜோடிக்கப்பட்டவை எனவும் அது தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...