சர்வதேச இந்திய திரைப்படவிழா என்றழைக்கப்படும் இந்திய பனோரமா, கோவாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெரும். இதில் கமர்சியல் மற்றும் கமர்சியல் அல்லாத பிரிவுகளில் படங்கள் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும். இதில் சிறந்தப் படங்களைத் தேர்வு செய்து விருது வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்று வரும், 42 விழாவில் மலையாளி இயக்கிய ‘’டேம் - 999’’ என்ற ஹாலிவுட் படத்தை திரையிடக்கோரி கேரள படைப்பாளிகள் குரல் எழுப்பினர். இது தமிழர்களுக்கு எதிரான படம் என்று இப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதிலும் தடைகோரி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை திரையிடஅனுமதிக்க கூடாது என்று தமிழ் படைப்பாளிகள் எதிர்ப்பு குரல் எழுப்பினர். இரு தரப்பினரும் கோஷம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். அப்போது, ‘’ஏன் இந்த கொலைவெறி’’ என்று மலையாள படைப்பாளிகளைப்பார்த்து தமிழ் படைப்பாளிகள் கோஷம் எழுப்பினர்.
No comments:
Post a Comment