உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள மோடிநகர் பகுதி பஞ்சாப் நேசனல் பேங்க் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பெண்ணின் அக்கெளண்டுக்கு ரூ. 29 கோடி வந்ததையடுத்து அந்தக் கணக்கை வங்கியின் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாதில் உள்ள பாரத் குக்கிங் கோல் லிமிட்டட் என்ற பொதுத் துறை நிறுவனத்தின் ஸ்டேட் வங்கியின் கணக்கிலிருந்து இந்தப் பணம் அந்தப் பெண்ணின் கணக்குக்கு வந்துள்ளது. சமீபத்தில் எல்ஐசி நிறுவனத்தின் 68 செக்குகள் ஒரு தபால் நிலையத்திலிருந்து திருடப்பட்டன. இதில் ரூ. 70 மதிப்புள்ள ஒரு செக் மோடிநகர் பஞ்சாப் நேசனல் பேங்கில் ஒரு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு, அந்தப் பணமும் எடுக்கப்பட்டுவிட்டது. இந்த மோசடி குறித்து பஞ்சாப் நேசனஸ் வங்கியின் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த ரூ. 29 கோடி பணம் பெண்ணின் அக்கெளண்டுக்கு வந்துள்ளது. இதுவும் எல்ஐசிக்கு சொந்தமான திருடப்பட்ட காசோலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment