கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சீமான், பேராசிரியர் தீரன் உள்ளிட்ட 600 பேர் கலந்துகொண்டனர். முதலில் இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பின்னர் பல நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்தது. பேராசிரியர் தீரன் பேசுகையில், பால் விலை, பேருந்து கட்டணம் உயர்ந்துவிட்டது. நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருக்கிறது. முதல் அமைச்சர் அவர்கள் நிர்வாகத்தை பாருங்கள். நிர்வாகத்தை பார்க்காமல் நாங்கள் என்ன செய்கிறோம். எங்களுக்கு தடை விதிப்பது, போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். உங்களுடைய பணிகளை மக்களுக்காக பிரச்சனை பாருங்கள் என்றார்.
சீமான் பேசுகையில், சீமான் ஒரு நாள் சட்டமன்றத்துக்குள் போவான். பிரபாகரன் படம் இருக்கும் சட்டையுடன்போவேன். சட்டயை கழட்டச் சொன்னால் சட்டையை கழட்டுவேன். உள்ளே உடம்பில் பச்சை குத்தியிருப்பேன். அப்ப வெளியே போகச் சொல்ல முடியுமா? என்றார்.
No comments:
Post a Comment