மலேசியாவில் உள்ள மிகப் பழமையான சீக்கிய குருத்வாராவை புதுப்பிக்க அந் நாட்டு அரசு 16,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. மலேசிய மக்களில் 8 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். இதில் சீக்கியர்களும் சிறிய எண்ணிக்கையில் உள்ளனர் கடந்த 200 ஆண்டுகளாக மலேசியாவில் வசிக்கும் சீக்கியர்கள், அந் நாட்டின் சபா மாகாணத்தில் 1924ம் ஆண்டில் இந்த குருத்வாராவை கட்டினர்.
இந்த வழிபாட்டுத் தலத்தை சீரமைக்க மலேசிய அரசு 16,000 அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது. இதே போல இந்து மதக் கோவில்களுக்கும் நிதி ஒதுக்கப்படும் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment