தமிழகத்தில் தஞ்சாவூர் மற்றும் கோயம்பத்தூரிலும் பி.பார்ம். எனப்படும் மருந்தாளுநர் படிப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் கூறினார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தேசிய மருந்தியல் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய டாக்டர் வி.எஸ். விஜய், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் 2,400 மாணவர்கள் மருந்தியல் பட்டயப்படிப்பு படித்து வருகின்றனர். இதுவரை 63 ஆயிரம் பேர் இப்படிப்பை படித்து முடித்துள்ளனர்.
மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி மட்டுமே மருந்தாளுநர்கள் மருந்துகளை வழங்க வேண்டும். நோயாளிகளுக்கு நேரடியாக மருந்து வழங்குவதை தவிர்க்க வேண்டும். அதேப்போல ஒவ்வொரு மருந்து கடைகளிலும் மருந்தாளுநர்கள் பணியாற்ற வேண்டியது மிகவும் அவசியம். 24 மணி நேரமும் மருந்தாளுநர்கள் பணியில் உள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தஞ்சாவூர், கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பி.பார்ம்., படிப்பு அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment