உலகம் முழுவதும் ஏற்படும் நில நடுக்க சம்பவங்களை அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கண்காணித்து வருகின்றது. உங்கள் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதை சில நிமிடங்களில் எச்சரிக்கை செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கின்றது அமெரிக்க புவியியல் ஆய்வு மையம். உலகில் விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் இயற்கை பேரழிவான நிலநடுக்கத்தின்போது பெருமளவில் மடிகின்றனர். நிலநடுக்கங்கள் குறித்து உடனடியாக தகவல் அறிந்து மனித உயிர்களை காப்பாற்ற அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இலவமாக மின் அஞ்சல் மூலம் தகவல்களை கொடுத்து வருகின்றது.
இந்த அரிய தகவலை பெற https://sslearthquake.usgs.gov/ens/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று Subcribe செய்த பின்னர் மாதிரி மின்னஞ்சல் நமக்கு வந்து சேரும். அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் சென்று தளத்தில் தெரியும் கூகுளின் வரைபடத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியை வரைந்த பின்பு சேமித்து விடவும். இனி மேல் நிலநடுக்க எச்சரிக்கை உங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும்.
அமெரிக்காவில் ஏற்படும் நிலநடுக்கம் பற்றிய தகவல்கள் 2 முதல் 8 நிமிடங்களில் மின்அஞ்சல் மூலம் கிடைக்கின்றது. ஆனால் உலகின் மற்ற பகுதிகளுக்கான தகவல் கிடைக்க சுமார் 20 முதல் 30 நிமிடம் வரை ஆகின்றது. இந்த தகவல் முழுக்க முழுக்க உண்மையானதாகவும், இதன் மூலம் ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள வழிவகை கிடைப்பதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆபத்தான நில நடுக்கத்தில் இருந்து தப்பிக்க இன்றே அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்றுக்கள்.
No comments:
Post a Comment