|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 November, 2011

பூமியை போன்ற தன்மைகள் கொண்ட புதிய கிரகம்!


பூமியை போன்ற ஒத்த தன்மைகள் கொண்ட புதிய கிரகம் ஒன்றை கலிப்போர்னியா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளித் துறை போராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர், பூமியில் இருந்து மிக அருகில் உள்ள ஜிலிஸி 581 என்ற நட்சத்திரம் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தனர்.

அந்த ஆராய்ச்சியில் ஜிலிஸி 581 நட்சத்திரத்தை சுற்றி வரும் 2 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். இதில் பூமியில் இருந்து 123 திரில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு கிரகம் பூமியை போலவே ஒத்த தன்மைகளை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள அந்த கிரகத்துக்கு ஜிலிஸி 581ஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.இது குறித்து ஆஸ்ட்ரோபிஸிக்கல் ஜர்னல் என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது, கடந்த 11 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிக்கு பிறகு, ஜிலிஸி 581ஜி என்ற புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் பூமியில் இருப்பது போலவே, நீர்ம நிலையிலான தண்ணீர் இருக்கலாம் என்று தெரிகிறது. அதன்மூலம் பூமியை போன்றே அதற்கும் சந்திரன்கள் இருக்கலாம்.

பூமியில் இருந்து 20.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஜிலிஸி 581 என்ற நட்சத்திரத்தை குறித்து ஆராய்ச்சியின் போது 2 புதிய கிரகங்களை ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்தனர். ஜிலிஸி 581 நட்சத்திரத்தை சுற்றி வரும் 4 கிரகங்களை ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில் புதிய கிரகங்களின் எண்ணிக்கையும் சேர்த்து தற்போது 6 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தை போலவே, ஜிலிஸி 581 நட்சத்திரத்தை சுற்றிலும் உள்ள கிரகங்களுக்கும் நீள்வட்ட சுற்றுப்பாதை உள்ளது. ஜிலிஸி 581ஜி பூமியை காட்டிலும் 3 முதல் 4 மடங்கு பெரிதாக உள்ளது. மேலும் அது நட்சத்திரத்தை 37 நாட்களில் ஒருமுறை சுற்றி வருகிறது. பாறைகளாலான நிலப்பகுதியை கொண்ட இந்த கிரகத்தில் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கலாம் என்று எதிர்ப்பார்ப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...